Cinema

லியோ படத்திற்கு விஜய் ரசிகர்களும் திராவிட கட்சிகள் மீது கடும் அதிருப்தி...?

vijay, lokesh kanagaraj
vijay, lokesh kanagaraj

திமுக அதிமுக என இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலையிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு அவரது திரை படங்கள் வரும் போது மிக பெரிய சிக்கலை சந்திக்க வேண்டிய நிலையே இன்றுவவரை இருக்கிறது.கடந்த அதிமுக ஆட்சியின் போது சர்கார் படம் வெளியான நிலையில் அதிமுக மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே இலவச பொருள்கள் கொடுப்பது குறித்து பெரும் சர்ச்சை வெடித்த நிலையில் இறுதியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பிரச்சனையை தீர்க்க வேண்டிய நிலையிலேயே விஜய் இருந்தார்.அதன் பிறகு விஜய் ரசிகர்கள் அதிமுகவிற்கு எதிரான நிலைக்கு செல்ல திமுகவிற்கு பல விஜய் ரசிகர்கள் கடந்த சட்டசபை தேர்தலில் வாக்கு அளித்தனர். ஆனால் தற்போது திமுக ஆட்சியிலும் அதே நிலை நீடிக்கிறது உதயநிதி உடன் உண்டான விநியோகஸ்தர் பிரச்சனை காரணமாக  லியோ படத்திற்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக பொதுவெளியில் விஜய் ரசிகர்கள் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில்தான் திராவிட கட்சிகளுக்கு எதிராக தனித்து கூட்டணி அமைக்க இருக்கும் பாஜகவும் விஜய் ரசிகர்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுக்கு எதிராக கை கோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது . இரண்டு தரப்பில் இருந்தும் இப்போது பேச்சு வார்த்தைகள் நீடித்து வருகிறதாம்.திரை பட துறையின் அடி நாதம் என தணிக்கை சான்றிதழ் கொடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்து இருக்கிறது மத்திய அரசு, இதுநாள் வரை எந்த திரைப்பட கலைஞர்களையும் தணிக்கை சான்றிதழை கொண்டு மத்திய பாஜக அரசு மிரட்டி பணிய வைத்தது இல்லை.ஆனால் திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழக சினிமா துறையை சேர்ந்த பலர் சினிமா துறையில் இருந்தே வெளியேறும் அளவிற்கு பல்வேறு அழுத்தங்கள் பல கால கட்டத்தில் கொடுக்கப்பட்டு வருகிறதாம் இதனை முழுமையாக உடைத்து எரியும் விதமாக பல சினிமா துறையை சேர்ந்த கலைஞர்கள் பாஜகவுடன் கை கோர்க்க தயாராகி இருக்கிறார்களாம்.அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக வந்த பிறகு எந்த திரைப்படம் குறித்தும் நடிகர்கள் குறித்தும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்ற உத்தரவை அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.

இந்த சூழலில் தான் அரசியல் ரீதியாக திராவிட கட்சிகளை விமர்சனம் செய்ய அண்ணாமலை விஜய்  என இருவரும் ஒரே அணியில் பயணிக்கும் வகையிலும் இரண்டு தரப்பிலும் பேச்சு வார்த்தைகள் தொடங்கி இருப்பதால் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் கடும் வேதனை அடைந்து இருக்கிறதாம்.வரும் நாட்களில் லியோ படத்திற்கு ஆளும் கட்சியான திமுகவால் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால் வெளிப்படையாக உடைத்து பேச நடிகர் விஜய்யும் தயாராகி வருவதால் விஜய் ரசிகர்களும் திராவிட கட்சிகள் மீது கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.அண்ணாமலை மேற்கொண்டுவரும் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது மதுரையை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் கட்சி கொடியுடன் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு தெரிவித்ததும், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக 2014-ல் மோடி அறிவிக்கப்பட்ட போது மோடியை விஜய் நேரில் சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.