![MKSTALIN, UDHAYANITHI](https://www.tnnews24air.com/storage/gallery/tSyLHgyCJCZ5KiGtqtZ9zWYzCdAjCvzauPmWoSxD.jpg)
கடந்த 1980 தற்போதைய முதல்வரான மு க ஸ்டாலின் தலைமையில் முன்னால் முதல்வராக இருந்த கருணாநிதி உருவாக்கிய அணியே திமுக இளைஞரணி! இந்த அணியின் முதல் கூட்டம் 2007 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இந்த மாநாட்டிற்கு பிறகு இளைஞரணி தலைவராக பொறுப்பேற்று இருந்த முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்கப்பட்டார். அதற்கு பிறகு இருந்து கட்சியின் மொத்த நடவடிக்கைகளையும் இவரே கவனித்து வந்தார் தற்போது முதல்வராகவும் இருக்கிறார். எப்படி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான முக்கா ஸ்டாலின் திமுக இளைஞரணி தலைவராக இருந்து துணை முதல்வராக மாறி தற்போது கட்சியின் தலைவராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருக்கிறாரோ அதேபோன்ற வரிசையில் முதல்வர் மு க ஸ்டாலினின் மகன் இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்கப்பட்டு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்கப்பட்டார்.
இதனை அடுத்து லோக்சபா தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திமுக இளைஞரணி மாநாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நிச்சயமாக நடத்தி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. இதற்காக பலமுறை தேதி குறித்து அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தது ஆனால் இரண்டு முறை இந்த மாநாடு தேதி தள்ளி வைக்கப்பட்டு கடந்த ஜனவரி 21ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகளும் தொண்டர்களுக்காக அசைவ மற்றும் சைவ விருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தொண்டர்கள் இருக்கையில் அமர்வதற்கு முன்பாகவே பிஸ்கட் வாட்டர் பாட்டில் போன்றவற்றோடு அமர வைக்கப்பட்டார்கள். ஆனால் இந்த மாநாட்டிற்கு போதிய இடவசதிகள் மற்றும் ஏற்பாடுகள் திறம்பட செய்யப்படவில்லை என்று திமுகவைச் சேர்ந்த தொண்டர்களே அவர்களது எக்ஸ் வலைதளத்தில் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
மேலும் மாநாட்டில் வழங்கப்பட்ட உணவும் தரமானதாக இல்லை என்றும் செய்திகள் வெளியானது. எனவே திமுகவின் நம்பிக்கை மாநாடாக திகழ்ந்து வந்த திமுக இளைஞரின் இரண்டாவது மாநாடு திமுகவிற்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த பல கூலி தொழிலாளர்களுக்கு திமுக இன்னும் அதற்கான ஊதியத்தை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் தெரிவிக்கும்போது திமுகவின் சேலம் மாநாடு நடந்து முடிந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. இன்று வரை மாநாட்டுக்கு, ட்யூப் லைட், பந்தல், உணவு உள்ளிட்ட வேலைகளை செய்த vendors ஒருவருக்குக் கூட பணம் போய் சேரவில்லை. திமுகவுக்காகவே தன்னை அர்ப்பணித்து வேலை செய்யும், "பந்தல்" சிவாவுக்குக் கூட இன்னும் பணம் கொடுக்கப்படவில்லை. இந்த vendors அனைவரும் இரு முறை மாநாடு தள்ளி வைக்கப்பட்டதால், மூன்று முறை பணியாற்றியுள்ளனர். மாநாடு நடந்த நாள், முக்கிய முகூர்த்த நாள்.
அந்த திருமண வேலையை விட்டு விட்டு திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு வேலை பார்த்த vendors இன்னும் கதறிக் கொண்டு இருக்கின்றனர். உதயநிதியின் உதவியாளர் செந்தில், தலைக்கனம் பிடித்த தறுக்கராக இருக்கிறார். யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை. செந்திலுக்கு நான் தான் அடுத்த முதல்வரின் பி.ஏ என்ற ஆணவம் வந்து விட்டது. மாநாட்டுக்கு வேலை செய்தவர்களுக்கு அவர்களுக்கு வரவேண்டிய தொகையை ஒரு மாதத்துக்கும் மேலாக இன்னும் கொடுக்காமல் இழுத்தடித்து விட்டு, "நீங்கள் நலமா" என்று போன் பண்ணி கேட்பதற்கு, இந்த குடும்பத்துக்கு எவ்வளவு ஏத்தம் இருக்க வேண்டும் ? என்று திமுகவின் செயலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது இவரின் பதிவும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பந்தல் போட்ட தொழிலாளிகளுக்கு திமுக ஊதியம் தரவில்லை என்ற தகவலும் காட்டுத் தீயாக பரவி வருகிறது.