கடந்த மே மாதம் 26ம் தேதி அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை எட்டு நாட்களாக நடத்தி முடித்தனர். இதற்குப் பிறகு அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது, இந்த சோதனையின் முடிவில் செந்தில் பாலாஜி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தற்போது மறுபடியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வருமானவரித்துறை சோதனையில் இறங்கியது. இந்த ரெய்டில் முன்பு சோதனை செய்து சீல் வைத்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 15க்கு மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் துப்பாக்கிய இந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பாதுகாப்பு தங்களது பணிகளை மேற்கொள்ளனர். இந்த ரெய்டின் மூலம் பல ஆவணங்களை ஐடி அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் சீல் வைக்கப்பட்ட இடங்கள் இன்னும் சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும் பல தகவல்கள் கூறப்படுகிறது.
மறுபுறம் அமலாக்கத்துறை எப்படியாவது செந்தில் பாலாஜி தங்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக நீதிமன்றங்களில் போராடி வருகிறது. அதோடு சட்ட வல்லுனர்களும் அமலாக்கத்துறை நினைத்தபடி செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எனும் புது பிரிவினர் செந்தில் பாலாஜியை நெருங்கியுள்ளனர். இவர்கள் செந்தில் பாலாஜியின் வழக்கை கையில் எடுத்ததன் மூலம் எப்படியும் அமலாக்கத்துறை அல்லது வருமானவரித்துறை போன்ற இரு துறைகளிடமிருந்து தப்பித்தாலும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் நிச்சயமாக சிக்குவார் எனவும் பேச்சுக்கள் நிலவி வருகிறது. அதாவது 2015 ஆம் ஆண்டில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 90 லட்சத்தை மோசடி செய்து வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது லஞ்ச மோசடி வழக்கு பதிவு செய்தும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அதே மோசடிக்காக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் நேர்முகத் தேர்வு நடத்திய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, இந்த மோசடி நடந்த காலகட்டத்தில் பணி அமர்த்தபட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. இப்படி பணியமர்த்தப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 80 பேர் இருப்பதாக கூறப்படுகிறது அவர்கள் அனைவருக்குமே மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகும் படி வலியுறுத்தியுள்ளது.
அதோடு செந்தில் பாலாஜியும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஆனால் அவரது சகோதரர் தலைமறைவாக உள்ள காரணத்தினால் வருகின்ற ஜூலை 6-ம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணத்துடன் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே வருமானவரி துறை மற்றும் அமலாக்க துறை செந்தில் பாலாஜியை விரட்டும் நிலையில் மூன்றாவது துறையாக இதில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இணைவது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது , செந்தில் பாலாஜியால் இனி தப்பிக்கவே முடியாது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விட்டாலும் அவர்கள் இந்த வழக்கை கண்டிப்பாக விடமாட்டார்கள் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன!