24 special

வேண்டும் என்றே முதல்வரை வம்பில் மாட்டிவிட்ட ஆர். எஸ்.பாரதி...!கடும் கோபத்தில் முதல்வர்...!

Rs bharathi, mkstalin, rnravi
Rs bharathi, mkstalin, rnravi

முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் இடையே நடைபெற்று வந்த பணி போர் தற்போது வெளிப்படையாக பொது வெளியில் செந்தில் பாலாஜியை முன்வைத்து வெடித்து இருக்கும் சூழலில் தற்போது இதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தனியாக சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறார்.


முதல்வரிடம் அரசியல் ஆலோசனை வழங்கிய டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கம் செய்தது உச்ச நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டு விடலாம் அதே நேரத்தில் தற்போது ஆளுநரிடம் இனக்கமாக செல்வது என்பது சில அரசியல் காரணங்களுக்கு தீர்வை கொடுக்கும் என தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் ஏன் சிலரது அறிவுரையை கேட்டு ஆளுநரை கோவபடுத்த வேண்டும் உதாரணமாக பல்கலைகலங்களின் வேந்தராக ஆளுநர் காலம் காலமாக தமிழகத்தில் தொடருகிறார் அதை மாற்ற வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததே ஆளுநரை கோவப்படுத்த முதல் காரணம்.

இவை அனைத்தையும் தாண்டி உங்களது அமைச்சரவையில் இடம்பெற்ற துரைமுருகன் தொடங்கி பொன்முடி வரை அமைச்சரை பல மேடைகளில் ஒருமையில் பேசி இருக்கிறார்கள் மேலும் திமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலரும் ஆளுநரை சீண்டும் விதமாக பேசுவது அரசியல் ரீதியாக பலனை கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் எதிர்மறை விமர்சனத்தை பெற்று தான் தீரும் என முதல்வருக்கு ஆலோசனை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியாக அணுக முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்த நிலையில் ஆளுநர் உடனான மோதல் போக்கை சற்று தள்ளி வைக்க முடிவு எடுத்து இருந்தாராம் ஆனால் அவை அனைத்தையும் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசிய பேச்சுக்கள் மொத்தமாக முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஆர் எஸ் பாரதி ஆளுநரை காவல் நாய் என பேசியதுடன் மோடி நினைத்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது என ஒருமையில் திட்டி தீர்த்து இருக்கிறார். ஆர் எஸ் பாரதி பேசிய பேச்சுக்கள் தற்போது தமிழகத்தில் காவல்துறையில் பணியாற்றும் பல காவல்துறை அதிகாரிகள் மத்தியிலும் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறதாம், ஆளுநர் ரவி முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால் பல இடங்களில் அவரை காவல் நாய் என ஆர் எஸ் பாரதி விமர்சனம் செய்வதாக இப்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

ஏற்கனவே ஆர் எஸ் பாரதி பத்திரிகையாளர்களை பார்த்து ரெட் லைட் என கூறியது மிக பெரிய அரசியல் ரீதியான பின்னடவை திமுகவிற்கு கொடுத்த நிலையில் தற்போது ஆளுநரை மிக தரக்குறைவாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதால் ஆளுநருடனான மோதல் போக்கை தவிர்க்கலாம் என இருந்த முதல்வர் ஸ்டாலின் கனவில் மண்ணள்ளி போடும் விதமாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.