அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மீண்டும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது மீண்டும் ஒரு திருப்பத்தை உருவாக்கி இருக்கின்றது.
கடந்த 2011 - 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் பிறகு இது தொடர்பாக அவருடைய நண்பர்களான சகாயராஜன், தேவ சகாயம், பிரபு, அண்ணராஜ் என்பவர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் இவ்வாறு தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய அமலாக்க துறை தரப்பு, செந்தில் பாலாஜி அதிகாரம் மிக்கவராக இருக்கின்றார். ஆனால் நாங்கள் அவர் மீதான குற்றச்சாட்டு அடிப்படையாகக் கொண்டுதான் வழக்கு போட்டுள்ளோம் என்றும், அதனால் செந்தில் பாலாஜி மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது என வாதிட்டனர்.
இருதரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த ஒரு சூழ்நிலையில் நேற்று அக்டோபர் 31 ஆம் தேதியான நேற்று செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய கூட்டுறவு போலீசருக்கு நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டது ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் புதிதாக விசாரணை நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் தற்போது எதிர்கட்சியாக செயல்பட்டு வரும் பாஜக, திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றங்களை சுமத்தி வருகிறது. கோவை குண்டு வெடிப்பு முதற்கொண்டு, டாஸ்மாக்கில் நடைபெறும் ஊழல் எனபல்வேறு விஷயங்களில் ஏற்கனவே பிரச்சனையை சந்தித்து வரும் அமைச்சருக்கு, அவர் மீதான வழக்கின் அடிப்படையில் மீண்டும் விசாரணை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.