திமுக அமைச்சர்கள் என்றாலே நிச்சயமாக ஏதாவது ஒரு ஊழல் வழக்கில் சிக்கி இருக்க வேண்டும் அல்லது அவர்கள் மீது இன்னும் விரைவில் வழக்குகள் வரும் என்று மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது திமுக அமைச்சர்களின் நிலைமை! ஏனென்றால் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த திமுகவின் சொத்து பட்டியல்களை அண்ணாமலை வெளியிட்டது வெறும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த முறைகேட்டால் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்! பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
அமலாக்கத் துறையும் சோதனையின் போது பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது இதனை அடுத்து செந்தில் பாலாஜி தன் காவலில் எடுத்து 3000 பக்க குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ததோடு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க முடியாதபடி பல ஆதாரங்களை செந்தில் பாலாஜிக்கு எதிராக சமர்ப்பித்து வருகிறது அமலாக்கத்துறை. இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமினுக்காக முதலில் சென்னை நீதிமன்றத்தையும் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் நாடிய பிறகும் ஜாமின் மனுகள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவரது நீதிமன்ற காவலும் அடுத்தடுத்த முறையாக நீடித்துக் கொண்டே வருவதும் செந்தில் பாலாஜி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சரி திமுகவின் ஒரு அமைச்சர் தான் இப்படி ஒரு சிக்கலில் மாட்டி உள்ளார் என்றால் இவரை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியும் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி தற்பொழுது சிறை தண்டனையை பெற்றுள்ளார்.
2006 - 2011 ஆண்டு திமுக ஆட்சி நடைபெற்ற பொழுது பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துள்ளதாக எழுந்த வழக்கின் மறு விசாரணையை தற்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கையில் எடுத்தார். மேலும் அவ்வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தற்போது மூன்று ஆண்டுகள் மற்றும் 50 லட்சம் ரூபாய் அபதாரத்தையும் பெற்றுள்ளனர். இதற்கிடையில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையும் முக்கிய தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் மேற்கொண்ட சோதனையும் அமைச்சர் துரைமுருகன் ஈடுபட்டிருக்கும் ஊழல் குற்றத்தை வெளிக்கொண்டு வரகொண்டு தான் என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். மேலும் திமுக அமைச்சர்களான ராமச்சந்திரன், காந்தி ஆகியோரும் அடுத்தடுத்த பட்டியலில் சிக்க உள்ளனர் என்றும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நிலையில், வழக்குகளில் சிக்கவுள்ள திமுக அமைச்சர்களின் பட்டியலில் புதிய ஒரு அமைச்சரும் இணைந்துள்ளார். அதாவது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சமூக வலைதள பக்கத்தில், அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் மதுரையில் சூர்யா நகரில் கட்டி இருக்கும் பிரம்மாண்ட திருமணம் மண்டபத்தின் வீடியோவை பதிவிட்டு "ஓடாய் உழைத்து மதுரை சூர்யா நகரில் ஒரு எளிய திருமண மண்டபத்தை கட்டியிருக்கும் அண்ணன் மூர்த்திக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார் இது சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது.. மிகவும் ஆடம்பரமாக பல வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டியிருக்கும் அந்த திருமண மண்டபம் கிட்டத்தட்ட பல கோடி மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் என்ற விமர்சனங்களும் தற்பொழுது எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த வீடியோவால் அமைச்சர் மூர்த்தியும் விரைவில் நீதிமன்ற வழக்குகளில் சிக்குவார் என்று தெரிகிறது.