தமிழில் எந்த படம் வெளியானாலும் முதலில் யூடியூபில் முதல் ஆளாக விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன் இவரின் ரிவியூ பார்த்து தான் தற்போது உள்ள ரசிகர்கள் படத்தை பார்க்க திரைக்கு செல்கின்றனர் என்பதற்கு மாற்று கருத்து கிடையாது. தமிழில் முன்னணி நடிகர் புது நடிகர் என யார் என்றும் பாராமல் அனைவரையும் கலாய்த்து தள்ளுவார். இவர் தமிழ் நடிகரை தாண்டி தற்போது டோலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். டோலிவுட் நடிகர் மகேஷ் பாபுவை டைரக்ட்டாக கலாய்த்து தள்ளியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை தாண்டி தொடர்ந்து பாடி ஷேமிங்கையும் செய்து வருகிறார் என குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு வந்தாலும், அவர் தொடர்ந்து திரைவிமர்சனம் செய்யும்போது நடிகர்களை சரமாரியாக விமர்சனம் செய்வார். டோலிவுட்டில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் நேற்று வெளியான குண்டூர் காரம் படத்திற்கு அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதற்கு நடிகர் பாலையாவின் லாட்ஜிக் இல்லாத காட்சிகளை கொண்ட படமே பார்த்துவிடலாம் எனும் அளவிற்கு இந்த படத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். எரியும் தீயில் என்னை ஊற்றும் அளவுக்கு திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பேசியுள்ளார்.
நேற்று வெளியான தியேட்டருக்கு சென்ற பார்த்த போது இந்த படத்தின் டைட்டிலை பார்த்த ரசிகர்களுக்கு செம மாஸ் மசாலாவாக இந்த படம் இருக்கும் என நினைத்து படத்துக்கு சென்றனர். ஆனால், அம்மா பாசத்தை அளவில்லாமல் பிழிந்து இந்த படத்தையும் சுமார் ரக படத்தின் வரிசைக்கே கொண்டு வந்து விட்டனர். அம்மாவை பிரிந்து மகனும் அவனது தந்தையும் வாழ்ந்து வரும் நிலையில், தாத்தா பிரகாஷ் ராஜ் மகனை அழைத்து உனக்கும் உங்க அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிக் கொடுத்து விடு என அழைக்க தனது அம்மாவுக்கு தன் மீது பாசம் இருக்கிறதா? என்பதை ஆராய போராடும் மகனின் கதை தான் இந்த படம். ஆனால், படத்தை ஆரம்பித்ததும் கதைக்குள் செல்லாமல் ஹீரோயினை காதலிப்பது, டூயட் பாடுவது, சண்டை போடுவது என சம்பந்தமில்லாமல் கதை செல்கிறது என்றும் கடைசியில் மகேஷ் பாபு கொட்டும் அம்மா பாசத்தை பார்க்க முடியவில்லை என விமர்சித்துள்ளார்.
அந்த விமர்சனத்தில் குண்டூர் காரம் என்றதும் படம் காரமாக இருக்கும் என பார்த்தால், ஹீரோ மகேஷ் பாபு. ஏன்டா இந்த மூஞ்சியை பார்த்தா மிளகாய் மாதிரி இருக்கா.. நடுவகிடு எடுத்து தலைசீவி, பூ வச்சு பொட்டு வச்சா அது இன்னொரு ஹீரோயின்டா என பங்கமாக கலாய்த்துள்ளார். தமிழ் நடிகர்களின் ரசிகர்களிடம் கழுவி ஊத்துனது பத்தாது என்று தெலுங்கு ரசிகர்களிடம் மூஞ்சை காட்டி வாங்கி கட்டி வருகிறார் திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.