தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது, அடுத்த முறை பிரதமர் தமிழகம் வரும்போது முதல்வர் ஸ்டாலின், திமுக தலைவராக இல்லாமல் முதல்வராக நடந்து கொள்வார் என்று நம்புவதாக அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார் மேலும் பல்வேறு ஊழல் விவகாரங்களையும் அறிக்கையில் அண்ணாமலை பட்டியல் போட்டுள்ளார் அது பின்வருமாறு :-
தினமும் சட்டசபையில் அனைத்து அமைச்சர்களை தனது மகனின் புகழை பாட சொல்வது. சினிமா துறையை ஆட்சிக்கு வந்த நாள் முதல் மொத்த குத்தகை எடுத்தது. Sweet box ஊழல், பொங்கல் தொகுப்பில் ஊழல், மின்சார துறையில் அனைத்திலும் ஊழல், ரோடு போடாமல் கரூரில் கமிஷன் அடித்தது என்று நீண்டு கொண்டேபோகிறது உங்கள் சாதனை.
தானே தலையிட்டு BGR நிறுவனத்திற்கு 4500 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை மீண்டும் வழங்கியது. இது போல் எதிர் காட்சிகள் குரல் கொடுத்தால் கையோட வெள்ளி தட்டை எடுத்து சென்று சமூக நீதி நாடகம் என்று புகைப்படங்கள் எடுத்து பரப்புவது. அதை மீறியும் கேள்வி கேட்டால் அவதூறு வழக்கு போட்டு சிறையில் அடைப்பது.சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்,
நேற்று நமது பாரத பிரதமர் மோடி ஒரு தலைசிறந்த தலைவரை போல் உரையாடினார், ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின்திராவிடம் எனும் வெங்காயத்தின் வெளிப்புற அடுக்கு போல நடந்து கொண்டார்.இனியாவது முதல்வர் மற்றவர் கைப்பிள்ளையாக இல்லாமல் சுயமாக சிந்தித்து செயல்பட்டு.,
அடுத்த முறை பாரத பிரதமர் சென்னை வருகையில் திமுக தலைவராக இல்லாமல் தமிழக முதல்வராக கலந்து கொள்வார் என்று பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது. அடுத்த வாரம் ஆதாரங்களுடன் உங்கள் அரசு செய்து வரும் இரண்டு ஊழல்களை பத்திரிக்கையாளரிடம் வழங்கவுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார்.
அடுத்த வாரம் ஊழல் பட்டியலை பத்திரிகையாளர்களிடம் வழங்க இருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்து இருப்பது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி இருக்கிறது. யார் அந்த அமைச்சர்கள் என்ன ஊழல் எத்தனை கோடி வரை நடந்துள்ளது, வெளியாக போகும் ஆதாரம் என்ன என்ன என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.