Tamilnadu

"அண்ணாமலைக்கு" கிடைத்த அடுத்த வெற்றி கன்னடத்தில் பேசியதும் வீண் போகவில்லை ! கொண்டாட தொடங்கிய மக்கள்!

stallin and annamalai
stallin and annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மக்களை பாதிக்கும் பல்வேறு அரசு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேரடியாக களத்திற்கே சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார், அந்த வகையில் கொரோனா காலத்தில் ஏன் கோவில்களை திறக்கவில்லை என்றும் மது கடையை திறந்து வியாபாரம் செய்யும் அரசாங்கத்தால் கோவில்களை திறக்க முடியாதா?


10 நாட்களுக்குள் கோவிலை திறக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பாஜக மிக பெரிய போராட்டத்தில் இறங்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தார் அவர் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்பட்டன இது ஒருபுறம் என்றால் அண்ணாமலை கொடுத்த அடுத்த எச்சரிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது.

கோவை அன்னூர் அருகே தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகம் (டிட்கோ) சார்பில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் குன்னிபாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வாக்கனாங்கொம்பு, ஆத்திக்குட்டை, குழியூர் ஆகிய 5 கிராம விவசாயிகளை  சந்தித்து அண்ணா மலை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களிடையே பேசினார்.

கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் வாக்கனாங் கொம்பு, ஆத்திக்குட்டை ஆகிய கிராமங்களில் அண்ணாமலை கன்னடத்தில் பேசினார். விவசாயிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: அன்னூர் தாலூக்காவில் 3,800 ஏக்கர் விளைநிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகம் சார்பில் வலுக்கட்டாயமாக முயற்சி எடுத்து வருகின்றனர்.

இங்குள்ள தண்ணீர் வளத்தை குறிவைத்து தொழிற்பேட்டை அமைக்க முயற்சிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகளை விவசாயம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் வானம் பார்த்த பூமி உள்ள பிற இடங்களில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். இங்கு அமைக்கக் கூடாது. அதையும் மீறி தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்தால், போராட்டங்கள் நடத்த பாஜக தயங்காது எனவும் ஒரு செங்கலை கூட நட பாஜக அனுமதிக்காது எனவும் எச்சரிக்கை விடுத்து இருந்தார் அண்ணாமலை.

இந்த சூழலில் அண்ணாமலை கொடுத்த எச்சரிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது  தற்போது நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தி வைத்து இருப்பதாக அரசு அறிவித்துள்ளது,இதுதொடர்பாக வருவாய்துறைஅதிகாரிகள் கூறும்போது, “எங்கெல்லாம் நிலம் இருக்கிறது என டிட்கோ சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கண்டறிந்து வருகின்றனர். அதில், ஒன்றுதான் கோவையில் உள்ள இந்த நிலப்பகுதி. இங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், எங்கெங்கு விவசாயம் நடைபெறுகிறது, எங்கு காலியிடம் உள்ளது என ஆய்வு செய்து வருகிறோம்.

விவசாயிகளின் ஒப்புதலும் வேண்டும் என்பதால், மேற்கொண்டு இந்த திட்டத்துக்கானஎந்தப் பணிகளும் நடைபெறவில்லை. தற்காலிகமாக அனைத்தும்நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தொடக்கநிலையில் இந்த திட்டம் இருப்பதால், தொழிற்பேட்டையில் எந்தெந்த நிறுவனங்கள் அமையப்போகின்றன என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை” என்றனர்.

பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தியும் கண்டு கொள்ளாத அரசாங்கம் அண்ணாமலை நேரடியாக களத்திற்கு சென்று தமிழிலும் கன்னடத்திலும் பேசி மக்களுக்கு உறுதிமொழி கொடுத்த நிலையில் உடனடியாக திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக அரசு குறிப்பிட்டு இருப்பது அண்ணாமலைக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் பலநாட்களாக போராடிவந்த  விவசாயிகள் ஊர் மக்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.