Tamilnadu

ஜோதிமணி ஒரு வார்த்தை சொன்னது குற்றமா சற்று முன் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்யும் திமுகவினர் !

jothimani
jothimani

தமிழக முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதை முன்னிட்டு, இன்று காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மாவட்ட கழக அமைப்புகளிலும் ஜெயலலிதா நினைவு நாளை கடைப்பிடிக்க அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி பல்வேறு மாவட்டங்களிலும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர், ஜெயலலிதா நினைவு நாளினை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஜெயலலிதா குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி தனது சமூக வலைத்தள பக்கத்தில்..ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் தனியொரு பெண்ணாக நின்று போராடி வெற்றி பெற்றவர். அவரது போராட்டம் அவரது தனிப்பட்ட போராட்டம் மட்டுமல்ல. பெண் என்றாலே எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்த ,ஒரு பெண்ணின் கதை. அவருக்கு எனது அன்பும்,அஞ்சலியும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.ஜோதிமணி குறிப்பிட்ட நொடிதான் தாமதம் இத்தனை நாட்களாக ஜோதிமணி பதிவிற்கு ஆதரவு தெரிவித்த திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து அவரது கருத்திற்கு கீழே எதிர் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு சிலர் திமுக இல்லை என்றால் டெபாசிட்டே வாங்கி இருக்க மாட்டீர்கள் ஆனால் இப்போது இப்படி ஒரு பேச்சா என கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர், இன்னும் பலரும் பலவாறு விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர், ஜோதிமணி முன்னாள் முதல்வர் ஒருவரை பெண் என்பதால் நினைவு நாளில் நினைவு கூர்ந்தது ஒரு தவறா? இப்படி கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே என ஜோதிமணி ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.