எதிர் கட்சிகள் இந்தியா கூட்டணியை தொடங்கி மூன்று ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ள நிலையில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை எதிர் கட்சிகளின் இந்த கூட்டணி நிலைத்து நிற்குமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. ஏற்கெனவே டெல்லியில் இருக்கும் எதிர் கட்சிகள் தொகுதி பங்கீட்டிற்காகவும் பதவிக்காகவும் ஆசைப்பட்டு ஒருவருக்கொருவர் தலைகால் புரியாமல் முட்டி கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா ராஜஸ்தான் தெலுங்கானா சத்தீஸ்கர் முதலிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரச்சாரங்கள் மாநாடுகள் என அரசியல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் முட்டிக் கொள்வது கூட்டணியில் உள்ள பின்னடைவை காட்டுகிறது.
மேலும் அடுத்த படியாக சரத்பவாரும் அஜித் பவாரும் அடிக்கடி ரகசிய சந்திப்பு நடத்தி வருவது எதிர் கட்சிகள் கூட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது இதுமட்டுமின்றி சரத்பவாரின் மகள் கூட அவ்வப்போது பாஜகா பக்கம் சாய்ந்து விடுவாரோ என்ற பயத்தில் இந்தியா கூட்டணி இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேறு மும்பை ஆலோசனை கூட்டத்தில் பிரதம வேட்பாளரை இந்த கூட்டத்தில் ஆவது அறிவித்தது விடுவார்கள் என்ற எண்ணத்தில் இருந்து வந்த நிலையில் அது நிறைவேறாமல் போனது தற்போது எதிர் கட்சிகள் கூட்டணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.இப்படி வரிசையாக எதிர் கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு அடிக்கு மேல் அடி விழுந்து கொண்டே இருப்பது தேர்தலின் போது இந்த கூட்டணி இருக்காது என்ற பெயரை தான் அரசியல் வட்டாரங்களில் சம்பாதித்து உள்ளது.இப்படி தொடர்ந்து பல சர்ச்சைகள் இந்தியா கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் பிரதான கட்சியாக விளங்கும் திமுகவில் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அவமரியாதை செய்து பேசியது மேலும் எதிர் கட்சிகளை வலுவிலக்க செய்து உள்ளது.
அதாவது சனாதனத்தை ஆதரிப்பவர்கள் பலர் எதிர் கட்சி கூட்டணியிலும் உள்ளனர்.ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உதயநிதி ஸ்டாலின் பேசியது எதிர் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது குறித்து ஹெச்.ராஜா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.சிவகங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஹெச் ராஜா மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் பாதி பணம் கணக்கில் வரவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் சனாதனம் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் அதைப்பற்றி தவறாக பேசி கொண்டிருக்கின்றனர் என்றும் அதைப் பற்றி தெரிந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்று கூறியதோடு ஏன் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸில் கரண் சிங், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனாவில் உத்தவ் தாக்கரே போன்றவர்களே கண்டனம் தெரிவித்தனர். உதயநிதி பேச்சால் இண்டியா கூட்டணி சிதறும் என்று எச். ராஜா கூறியது தற்போது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த அவதூறான பேச்சுக்கு ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி போன்றோர் ஒன்று எதிர்க்கட்சியில் இருந்து நாங்கள் விலகி விடுகிறோம் அல்லது திமுகவை விலக்கி வைத்து விடுங்கள் என்று வரும் காலங்களில் சொல்வதற்கு கூற வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்படி உதயநிதி பேசிய ஒற்றை வார்த்தை ஸ்டாலினின் தேசிய அரசியல் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் விவரமில்லாமல் உதயநிதி பேசி இண்டியா கூட்டணியை முடித்துவிட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன... ஏற்கனவே வட இந்திய பப்பு ராகுல் காந்தி தென்னிந்திய பப்பு உதயநிதி என அண்ணாமலை கூறியது வேறு அப்படியே நடக்குதே என விமர்சனங்கள் எழுந்துள்ளன..