24 special

கிராம மக்கள் வரை சென்ற அண்ணாமலையின் புகழ்....!போட்டு தாக்கும் பெண்கள்...!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

அண்ணாமலையை யாத்திரையில் சந்தித்து மனு கொடுக்க இருந்த பெண்கள் தெரிவித்த தகவல்கள் உண்மையில் கிராமம் வரை மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.


எதற்காக இங்கே வந்து இருக்கிறீர்கள் என செய்தியாளர் கேட்க அண்ணாமலையை பார்க்க நிக்கிறோம் ஏன் என மற்றொரு கேள்வி கேட்க யார் சொல்லியும் இந்த அரசு கேட்காது அண்ணாமலை சொன்னாதான் கேட்கும் எனவும் முதலில் தெரிவித்தார்கள்.

அதன் பிறகு பெண்கள் மொத்தமாக தெரிவித்த தகவல்தான் களத்தை அதிர செய்தது.. இலவச பஸ் என சொல்லி எங்களுக்கு எந்த பலனும் இல்லை சார் யார் கேட்டா இவர்கிட்ட இலவச பஸ்... பஸ் காசை குறைச்சா நாங்களே எடுத்து கிருவோம்.

கரண்ட் பில் ஏறி போச்சு... நாங்கெல்லாம் தினமும் வேலை செஞ்சு சாப்பிடுறோம் இப்படி கரண்ட் பில் ஏறினா என்ன செய்றது சார் சொல்லுங்க இந்த ஆட்சி சரியில்லை மோடிதான் வரணும் தமிழ்நாட்டில் அண்ணாமலை மாற்றத்தை உண்டாக்குவார் என்ற நம்பிக்கையில் நாங்க வந்து இருக்கோம் என பேசினார்கள்.

இதன் மூலம் அரசியல் களம் திமுகவிற்கு எதிராகவும் பாஜகவிற்கு ஆதரவாகவும் கிராம பெண்கள் மத்தியிலும் சென்று  இருப்பது தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது