24 special

கேப்டனின் இறுதி சடங்கிற்கு வராமல் சூர்யா பதுங்கிய காரணம் வெளியில் வந்தது...!

vijayakanth, surya
vijayakanth, surya

1979 ஆம் ஆண்டில் இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஜயகாந்த் தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை, கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், ரமணா, வானத்தைப்போல வைதேகி காத்திருந்தாள், தவசி போன்ற 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று கேப்டன் என்று அழைக்கப்பட்டார் விஜயகாந்த். அதுமட்டுமின்றி சினிமா வாழ்க்கையில் தான் மட்டும் வளர்ந்தால் பத்தாது தனுடன் வாய்ப்பு கிடைக்காமல் அலையும் இயக்குனர்களின் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர் விஜயகாந்த்! இப்படி திரை வாழ்க்கையில் சிறந்து விளங்கிக் கொண்டிருந்த விஜயகாந்த் 2005 இல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கினார்.


மேலும் இந்த கட்சி திமுக அதிமுக என்ற திராவிட கட்சிகளால் ஆளப்பட்டு வரும் தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய மாற்றாக அமையும் என்றும் தெரிவித்திருந்தார் அதன்படியே தேமுதிக ஒரு கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு வந்த அடுத்த தேர்தலிலே இறங்கியது! அரசியலின் ஆரம்ப கட்டத்தில் படிப்படியான வெற்றியை கண்டு வந்த விஜயகாந்த்துக்கு கூட்டணிக்கு பிறகு தோல்வியே கிடைத்தது அதனை ஒட்டிய அவரது உடல் நிலையும் சிறிது சிறிதாக பாதிப்படைய ஆரம்பித்தது அதனால் இவர் அவ்வப்போது மருத்துவமனை சிகிச்சைகளை பெற்று வந்தார் பல நேரங்களில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நிலைக்கும் தள்ளப்பட்டார். இருப்பினும் உடல் நலம் திரும்பி வீடு திரும்பிய விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து ஒரு நல்ல மனிதரை தமிழகம் இழந்தது! முதலில் விஜயகாந்தின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது ஆனால் அவரை காண்பதற்கு மக்கள் நூற்றுக்கணக்கில் வர ஆரம்பித்ததால் சென்னை தீவு தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தார்.பல திரை உலக பிரபலங்களும் ஆயிரக்கணக்கான மக்களும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்தின் இறப்பிற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகர் சூர்யா விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு நேரில் வராமல் வெளிநாட்டில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுதே விஜயகாந்தின் மரணம் தனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்ற ஒரு வீடியோவை பதிவிட்டு வெளியிட்டு இருந்தார்.

ஏதோ சூட்டிங்காக சென்று அவர் வர முடியாத நிலையில் இது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் சூர்யா புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றதாகவும் அதிக தொகைக்கு பெரும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வெளிநாட்டிற்கு சென்ற சூர்யாவால் விஜயகாந்த் பார்ப்பதற்காக ஒரு நாள் இந்தியாவிற்கு வருவதற்கு மனம் இல்லாமல் செலவை கணித்து வெளிநாட்டில் இருந்தபடியே வீடியோ வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சினிமா விமர்சகர்கள், நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தது மட்டுமின்றி சூர்யாவின் முதல் ஏழு படங்கள் பெரும் சரிவை சந்தித்த நிலையில் விஜய்க்கு எப்படி செந்தூரப் பாண்டி படத்தில் திரை வாழ்க்கையை ஆரம்பித்துக் கொடுத்தாரோ அதேபோன்று சூர்யாவிற்கு பெரியண்ணா படத்தின் மூலம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்! ஆனால் சூர்யா அதனையும் மதிக்காமல் நன்றி கெட்டு வெளிநாட்டில் இருந்து கொண்டு விஜயகாந்தின் இறுதி சடங்கு இருக்கு வராமல் புறக்கணித்தது தவறு என்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.