சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவரது பாடலை கேட்டு குத்தாட்டம் போடாத இளசுகளே கிடையாது அப்படி ஒரு வைஃபை கொடுத்திருப்பார். இசையமைப்பாளர் வரிசையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் ஆண்டனி. அதிலும், குறைவான படத்திற்கு இசையமைத்து முன்னனி நடிகர்களின் படத்திற்கு கமிட் ஆனவர். தற்போது நடிகராக அறிமுகமாகி சினிமாவில் கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி பேசிய பேச்சு பேசு பொருளாக மாறியுள்ளது.
இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தனித்துவமான பாடல்கள் மூலம் ரசிகர்கள் கவர்ந்தவர். இசைமட்டுமின்றி நடிகராக நான், பிச்சைக்காரன் போன்ற படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை தனது வசம் கொண்டுவந்தவர். தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் விஜய் ஆண்டனி, இப்போது சமீபத்தில் ரோமியோ என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். இந்தப் படத்தின் போஸ்டரே கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும்.
அதாவது, முதலிரவில் கணவனும் மனைவியும் சேர்ந்து மது குடிப்பது மாதிரியான போஸில் விஜய் ஆண்டனியும் ஹீரோயினும் உட்கார்ந்திருப்பார்கள். இந்த போஸ்டர் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் இதன் மூலமே விஜய் ஆண்டனி சிக்கியுள்ளார். ப்ரோமோஷன் நடைபெற்றபோது விஜய் ஆண்டனியிடம் நிருபர் ஒருவர், பெண்களும் குடிக்கலாமா? என்று கேட்டார். ஆண் குடிக்கிறார் என்றால் பெண்ணும் குடிக்கலாம். ஆண், பெண் இருவரும் சமம்தானே என்று சொல்லி கலாய்த்தார். தமிழகத்துல மதுவை ஒழிக்கனும்னு போராடுறோம். அப்போ குடியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற மற்றொரு கேள்வியை நிருபர் கேட்க ‘அப்படியெல்லாம் இல்லை. ஜீஸஸ் காலத்தில் இருந்தே குடி என்பது வெவ்வேறு பெயர்களில் புழக்கத்தில் இருந்துதான் வந்திருக்கின்றன.
நான் குடியை ஆதரிக்கவில்லை. ஆண்களை மது குடிக்க வேண்டாம்னு சொன்னால் அது பெண்களுக்கும்தான். அந்த காலத்தில் திராட்சை ரசம் என இருந்தது. ஜீசஸ் கூட குடிச்சிருக்கார். ராஜா காலத்தில் சோமபானம்" என இருந்தது என்று கூறினார். இது படத்தின் புரமோஷனுக்காக பேசினாரா இல்லை சம உரிமை வேண்டி பேசினாரா என்பது குறித்து எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. விஜய் ஆண்டனியின் பேச்சு இணையத்தில் உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.