24 special

வெயிலின் தாக்கத்தினால் சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...

SUNRISE
SUNRISE

நாடெங்கும் தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் தமிழ்நாடு முழுக்க கோடை வெயில் ஆனது மக்களை வாட்டி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. எப்போதும் கோடை காலம் துவங்கிய உடனே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும். ஆனால் இந்த ஆண்டுதான் கோடை காலம் துவங்குவதற்கு முன்பே இந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மே மாதங்களில் நடிக்கும் வெயில் தற்போது மார்ச் மாதத்திலேயே அடிக்கும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் ஏப்ரல் மாதத்தில் மார்ச் மாதத்தில் அடித்த வெயிலை காட்டிலும் அதிக அளவில் அடித்து வருகிறது. மேலும் வானிலை அறிக்கை மையங்கள் அவ்வபோது வெயிலின் அளவை அடிக்கடி சோதித்து அவற்றை மக்களுக்கு தெரிவித்துக் கொண்டே தான் இருக்கிறது. இனி வரப்போகும் நாட்களிலும் கூட வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனால் தற்போது உள்ள வெயிலின் தாக்கமே மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. மேலும் மக்களும் அடிக்கடி வெயிலினால்  ஏற்படும் நோய்களை சரி செய்வதற்கு அவ்வபோது பல மருந்துகளையும் ஆகாரங்களையும் உட்கொண்டு வருகின்றனர். மேலும் இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வெப்ப ஆலையின் எதிரொலியாக ஆயிரம் இடங்களில் ஓ ஆர் எஸ் கரைசல் என்று கூறப்படும் உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை வழங்கும் மையமும் அங்கங்கு அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மையங்கள் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரையும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்பெல்லாம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால்அம்மை போடுவது, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் அதிக அளவில் பரவி வரும். அதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் காரணத்தினால் அங்கங்கு சிறு குழந்தைகள் கூட வெயிலினை தாங்க முடியாமல் பாதிக்கப்பட்டும், அதில் ஒரு சிலர் தாங்க முடியாமல் இறந்து விடுகின்ற செய்திகளை அறிய முடிகிறது. இதனை பார்க்கும் பொழுது எப்படி இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க போகிறோம் என்ற அச்சத்தினை மக்கள் மத்தியில் எழுப்பி வருகிறது.

இந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கத்தினால் மீண்டும் ஒரு குழந்தை இறந்துள்ளது. அதைப்பற்றி விரிவாக காணலாம்!!ராணி குப்பம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சத்தியா மற்றும் மனைவி வெண்ணிலா மேலும் இரண்டு குழந்தைகளான ஹர்சன் மற்றும் பரத் ஆகியோருடன் நத்தம் பகுதியில் உள்ள மலை உச்சியில் உள்ள மூங்கில் அம்மன் கோவிலுக்கு நேற்று கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது மலை மீது உள்ள கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து நடந்து சென்ற போது மூத்த மகனான ஹர்ஷன்  திடீரென்று மயக்கம் அடைந்துள்ளார். இந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதிக்கும் பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் மலை ஏறி சென்றதன் மூலம் உடல்நிலை சோர்வடைந்து வெயிலினை தாங்க முடியாமல் சிறுவனான ஹர்ஷன் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவி வருவதால் பெற்றோர்கள் மத்தியில் அதிக அளவில் பயத்தை ஏற்படுத்தும் ஒன்றாக தற்போது இது இருந்து வருகிறது. மேலும் பெற்றோர்கள் அனைவரும் அவர்களின் குழந்தைகளை வெயிலில் இருந்து காப்பதற்காக பல மருந்துகளையும், உணவுகளையும் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.