24 special

அதிமுக பிரமுகர் கைதுக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சிறுத்தைகள்...என்னவா இருக்கும்??

THIRUMAVALAVAN , ANNAMALAI
THIRUMAVALAVAN , ANNAMALAI

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப்படும் பொழுது என்ன செய்யப் போகிறார் என்ற ஒரு கேள்வியும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் முன்பில்லாத வகையிலான ஒரு முன்னேற்றத்தை தமிழக பாஜக தமிழகத்தில் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை அமைந்துள்ளார். முதலில்  ஆளும் கட்சி மேற்கொள்கின்ற ஊழல்களையும் தொடர்ந்து அவர்கள் தன் குடும்ப சொத்தை மட்டும் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும் ஆதாரத்தோடு குற்றச்சாட்டினார். மேலும் அந்த ஆதாரங்களை திமுகவின் பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு என திமுக நிர்வாகிகளின் சொத்துக்களை வெளியிட்டார். இந்த இரண்டுமே தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி திமுகவின் நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வரின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் இருவரும் சேர்த்துள்ள சொத்துக்களை எப்படி பாதுகாப்பது எங்கு வைத்து மறைப்பது என்று தெரியவில்லை என புலம்பிய ஆடியோ இணையத்தில் வெளியானதும் திமுகவை அள்ளாட வைத்தது!  இந்த சம்பவத்திற்கு பிறகு பி டி ஆர் திமுகவில் ஒதுக்கப்பட்டவராகவும் பெயருக்கு ஒரு அமைச்சராகவும் செயல்பட்டு வந்தார் என்பதும் அரசியல் விமர்சகர்களால் கிசுகிசுக்கப்பட்டது. 


இதற்கு அடுத்தபடியாக பாஜக மாநில தலைவர் முன்னெடுத்த என் மண் என் மக்கள் நடைபயணம் ஆனது தமிழகத்தில் பாஜகவிற்கு மாபெரும் ஒரு வெற்றியை கொடுத்தது இந்த நடைபயணத்தின் தொடக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை புரிந்து தொடங்கி வைத்தார் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு மாபெரும் வெற்றியாக இந்த நடைபயணம் அமைந்தது. இந்த நடை பயணத்தின் பொழுது அண்ணாமலைக்கு தமிழக மக்கள் கொடுத்த வரவேற்பும் திமுக அரசின் மீது கொண்டிருந்த அதிருப்தியும் அவர்கள் வெளிகாட்டிய செய்திகள் செய்தித்தாள்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளிவந்தது திமுகவிற்கு லோக்சபா தேர்தல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது. என் மண் என் மக்கள் நடை பயணம் முடிந்த சில நாட்களிலேயே லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் வலுவெடுக்க ஆரம்பித்தது. 

அந்த பிரச்சாரத்தின் போது அதிமுக எந்த கூட்டணியில் இருக்கிறது என்பது தெரியாமல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது அதுமட்டுமின்றி பெரும்பாலான தொகுதிகளில் தற்போது பாஜகவின் வேட்பாளர்கள் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளியான சர்வே முடிவுகள் கள நிலவரங்கள் அனைத்தும் திமுக மற்றும் அதிமுகவை பதைபதைக்க வைத்ததால் இருவரும் பங்காளிகள் போன்ற உறவைக் கொண்டுள்ளதாகவும் எந்த ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றியடைகிறாரோ அங்கு திமுகவும் அதிமுகவும் கைகோர்க்கும் என ஆணித்தரமான குற்றச்சாட்டுகளை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன் வைத்திருந்தார். அதற்கேற்றார் போலே இரண்டு கட்சிகளின் நடவடிக்கைகளும் இருந்து வந்தது. இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்ட மூன்று தொகுதிகளிலும் திமுக கொடுக்காததால் திமுக மீது விடுதலை சிறுத்தைகள் அதிருப்தியிலேயே லோக்சபா தேர்தல் கூட்டணியில் இணைந்ததாக சில பேச்சுக்கள் உலா வந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிமுக பிரமுகர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி மற்றும் பெண்களை குறித்து ஆபாசமாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டது குறித்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 

அப்படி கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தெய்வானை தலைமையில் 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் போடும் பதிவிற்கெல்லாம் கைது செய்வீர்களா என்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்..! கைது செய்யப்பட்டதோ அதிமுகவை சேர்ந்தவர் ஆனால் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்! இந்த செய்தியை கேட்கும் போதே பலருக்கும் பலவித சந்தேகங்கள் ஏற்படுத்துகிறது, ஏற்கனவே திமுகவும் அதிமுகவும் கூட்டு என்ற வகையிலான பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது அதோடு விடுதலை சிறுத்தைகளும் திமுக மீது அதிருப்தியில் உள்ளதால் 2026 சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் அதிமுக பக்கம் திரும்பலாம் என்ற பேச்சு உள்ளது இந்த இரண்டில் எது தற்போது நிகழ உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.