24 special

சின்னத்திரை பிரபலத்தின் தாராள மனசு..! கொண்டாடும் ரசிகர்கள்!

KPY Blala
KPY Blala

சின்னத்திரையில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் பாலா. தற்போது உதவி கரங்களை செய்த வண்ணம் உள்ளார். முதலில் ஆதரவற்ற குழைந்தைகள் உள்ளிட்டோருக்கான காப்பகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார். இவர் தொடர்ந்து கர்ணன் போல அனைத்து உதவிகளையும் செய்துவருவது மக்கள் இடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சி மூலம் சம்பாதித்த பணத்தை மலை கிராம மக்களுக்கு 4 இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார். பலரும் பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்த வந்த வண்ணம் இருந்தனர். இதன் பின்னும் தமிழக அரசு எந்த ஊர்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறியாமல் தனது பாதுகாப்புக்கு காரை வங்கியிருப்பதாக விமர்சனத்தை வைத்து வருகின்றனர். இதற்கிடையில் சென்னையில் கடந்த மாதம் 3ம் தேதி மற்றும் 4ம் தேதி பயல் ஏற்பட்டு மக்களுக்கு உதவி தேவைபட்டபோது தான் சமித்து வைத்த தொகையில் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 கொடுத்து உதவினார். சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்தில் ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார்.

தொடர்ந்து மழை வெள்ளம் என்று பாராமல் மக்களுக்கு உதவி செய்து வந்த இவர் தனக்கென்று எதையும் எடுத்து வைக்காமல் வாரி வழங்கும் வள்ளலாக பார்க்கப்பட்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஒருவரும் இப்படி களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்யவில்லை. இதற்கு மாறாக முதலமைச்சரிடமும், உதயநிதியிடமும் நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா மட்டும் வடிவேல் போன்றவர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர். இதற்கு அரசியல் விமர்சகர்களோ உதயநிதியிடம் கொடுத்தால் தான் படத்திற்காக வாய்ப்பு கிடைக்கும் மற்றும் அவர்களது படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கும் என்றும் கருத்துக்களை முன் வைத்து வந்தனர்.

இந்நிலையில், பாலா சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை இன்று தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டி இருக்கிறது. அனைவராலும் அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல முடியவில்லை. அதனால் தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளோம். இந்த இலவச ஆட்டோ காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். அனகாபுதூர், பம்மல், பல்லாவரம் போன்ற இடங்களை சுற்றியுள்ள மக்கள் மருத்துவத்திற்காக இந்த ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாம். இது எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதை பார்த்துவிட்டு மற்ற பகுதிகளுக்கு ஆட்டோ வழங்குவேன். இந்த ஆட்டோ ஒட்டுனரின் சம்பளம் மற்றும் பெட்ரோல் என் சொந்த செலவில் வழங்கப்படும்" என்று கூறினார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக உதவி கரம் நீட்டியது போல் சொன்னபடி அரசியலுக்காக எதையும் செய்யவில்லை தன்னால் முடிந்ததை ஏழை மக்களுக்காக உதவி செய்து வருகிறேன் என கூறியது போல் தர்ப்பதும் இதை தான் மனுஷன் சொல்லி வருகிறார். பிண்ணனியில் எந்த நோக்கத்தையும் கொண்டு தான் செய்யவில்லை என்னால்  முடிந்த உதவு தான் என கூறுகிறார். இந்த சம்பவம் பார்ப்பவரை மொத்தமாக நெகிழிச்சி அடைய  வைத்துள்ளது பாராட்டுகளும் குவிந்த வண்ணம் வருகிறது..