கடந்த 2021ல் தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு பாஜக மேற்கொள்ளும் ஒவ்வொரு நகர்வுகளும் அரசியலில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்றால் அதிரடியான பல கருத்துக்களும் பல உண்மைகளும் ஆதாரத்துடன் வெளியாக போகிறது என்று பத்திரிகையாளர்கள் அனைவரும் அண்ணாமலையின் சந்திப்பிற்கு ஓடிச்சென்று பேட்டி எடுத்து வருகின்றனர். அது மட்டும் இன்றி சமூக வலைதளம் முழுவதுமே மக்களுக்கு நடக்கும் ஒவ்வொரு அநீதிகள் குறித்த செய்திகள் கிடைத்தவுடன் அதற்கான குரலை முதல் ஆளாக அண்ணாமலை கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திமுகவின் ஊழல் விவகாரங்களை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு என்றுமே அண்ணாமலை தயங்கி நின்றதில்லை மேலும் தற்போது அவர் தலைமையில் நடைபெற்று வரும் என் மண் மக்கள் நடைபயணமும் தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பாஜகவிற்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
அதோடு எங்க பார்த்தாலும் அண்ணாமலை மட்டுமே தெரிகிறார் அவரது கட்சி என்ன செய்கிறது என்று கேட்டால் அவரே மொத்த கட்சியாகவும் மொத்த கட்சிகள் இணைந்து அண்ணாமலைக்கும் உறுதுணையாகவும் நிற்கிறார்கள். நேற்றைய தினம் கூட பாஜகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்ற பொழுது கட்சி யாரை எம்பி வேட்பாளராக நியமிக்கிறதோ அவர்கள் மட்டும் வேட்பாளர்கள் அல்ல நாம் ஒவ்வொருவரும் வேட்பாளர்கள் என நினைத்து தேர்தலில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது தொண்டர்கள் அனைவருக்கும் ஊக்கமளித்தார். அவர் கொடுக்கும் நம்பிக்கையாலும் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை பார்ப்பதால் பாஜக கட்சிக்குள் ஒரு சமநிலையை பேணிக்காத்து வருகிறது. அதுமட்டுமின்றி பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் ஒவ்வொருவருமே சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பார்கள், அந்த வகையில் பாஜக பெண் நிர்வாகியான ஜெயலட்சுமி அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் திமுக அரசு மக்கள் வரி செலுத்தும் நிதியில் கட்டும் ஒவ்வொரு கட்டிடங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அனைத்திற்கும் கருணாநிதி அவர்களின் பெயரை வைத்து வருகிறது ஏன் திமுக விடம் பணம் இல்லையா அவர்கள் சொந்த செலவில் ஒரு மைதானத்தை கூட அமைத்து கருணாநிதி மைதானம் என்று பெயர் வைக்க வேண்டியதுதானே! ஆனால் எதற்காக மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தி இப்படி கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் மேலும் அவர்கள் மொழியில் இதை கூற வேண்டும் என்றால் இது என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு திமுக ஆதரவாளர் ஒருவர் பெண்ணென்றும் பாராமல் ஜெயலெட்சுமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அதற்கு மறு விமர்சனத்தை ஜெயலட்சுமி முன்வைத்த பிறகு ஒரு புதிய நம்பரில் தொலைபேசி மூலம் ஜெயலட்சுமியை அழைத்து தகாத முறையில் பேசி உள்ளார்! இதுகுறித்தும் ஜெயலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் ஜெயலஷ்மி அவரை தொலைபேசி அழைத்து பேசிய நம்பரை பகிர்ந்து இந்த நம்பரில் இருந்து “திமுகவிற்கு எதிராக போட்ட பதிவை உடனடியாக நீக்கு” என்று மிரட்டி,மிக ஆபாசமாக பேசி இந்த நம்பரில் இருந்து இந்த ஐடியின் சொந்தக்காரர் என சொல்லிக்கொண்டு என் தொலைபேசியில் அழைத்திருக்கிரான். இது யார் என்று தெரிந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும். அவன் தாயை நான் சந்திக்கணும் என்று பதிவிட்டுள்ளார். இப்படி பாஜகவினர் தொடர்ந்து திமுக மக்களை ஏமாற்றுவதை குறித்து சமூக வலைதளத்தில் முன்வைக்க அதற்கு பாஜகவின் பெண் நிர்வாகிகளை தகாத முறையில் பேசி வருகிறார்கள் திமுகவினர் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த விஷயம் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.