திமுக குடும்பம் அரசியல் வாரிசு செய்வதில் அடித்து கொள்ளமுடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கருணாநிதிக்கு பிறகு திமுகவை யார் தலைமை தாங்க போவது என்ற கேள்வி எழுந்த நிலையில் முக ஸ்டாலின் அந்த பொறுப்பு வந்தது. அதன் பிறகு ஸ்டாலின் மகன் உதயநிதி சினிமாவில் ஆர்வம் செலுத்தி வந்த நிலையில் சில படங்களில் ஹீரோவாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு நடித்து வந்தார் சினிமாவில் தனக்கென்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் உதயநிதி.
சினிமா நிகழ்ச்சியில் அடுத்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை என்று சொல்லி மழுப்பினார். அதன் பிறகு எம்எல்ஏ., சீட் கொடுத்து அழகு படுத்தி பார்த்தது திமுக தலைமை. பின் அமைச்சர் வாய்ப்பு அமைந்தது அதில் இருந்து தமிழகத்தில் யார் முதலமைச்சர் என்ற நிலைப்பாடு மக்களிடம் நிலவியது அனைத்து நிகழ்ச்சியிலும் உதயநிதி முன் நிறுத்தினார்கள். அடுத்த குடும்ப வாரிசு ரெடி என்று கொந்தளித்த நிலையில் வரும் நாட்களில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற தகவல் கசிந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையில் சேலம் மாவட்டத்தில் மிக பிரமாண்டமாக இளைஞரணி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் வெள்ளம், தென் மாவட்டத்தில் வெள்ளம் என தொடர்ச்சியாக மழையின் காரணத்தால் அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக மாநாடு வரும் 21ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என திமுக உறுதிப்பாடாக உள்ளது. இந்த மாநாட்டின் பிறகு உதயநிதிக்கு அந்த பொறுப்பை கொடுத்துவிட்டு முதலமைச்சர் ஓய்வு எடுக்காமல் என சில ஊடகங்களில் தகவல் வந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த முதலமைசகர் ஸ்டாலின் தேவையில்லாமல் வரும் வதந்திகள் நம்ப வேண்டாம் என விளக்கம் கொடுத்தார்.
ஆனாலும், பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் முன்னாடி திமுக சார்பில் கொள்கை விளக்கம் கூட்டம், ஆயுத்த மாநாடு மற்றும் முப்பெரும் விழா போன்றவை நடத்தி திமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். இப்போது துணை முதலமைச்சராக பொறுப்பாக உதயநிதியிடம் என்ன தகுதி இருக்கு எதனை கூட்டத்தை கூட்டி தனது ஆதரவை நிரூபித்து இருக்கிறார் என கேள்வி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் நடத்தும் பூத் கமிட்டியில் கலந்துகொண்டு தனது ஆதரவை காண்பிக்கிறார்.
இதற்கு எல்லாம் மாறாக உதயநிதி இன்னும் சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியில் வராமல், தயாரிப்பு நிறுவனம் மூலம் லாபம் ஈட்ட நடிகர்களை மிரட்டி வருவதாகவும் திமுக கூட்டத்தில் பங்கேற்காமல் தியேட்டரில் சென்று அங்கு உதவி செய்து வருவது யாருக்கு என்ன பயன்? இதனால் திமுக கட்சி செல் அரிது கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் உதயனியிடம் வந்தால் மொத்தமாக முடிந்து விடும் என விமர்சனத்தை வைத்துள்ளார். சேலத்தில் நடக்கும் இளைஞரணி மாநாடு மூலம் தெரியவரும் திமுக கட்சி இருக்கிறதா இல்லையா என்பது. அந்த மாநாட்டில் முதலில் இருந்த ஆர்வம் தொண்டர்களுக்கு இப்பொது இல்லையாம் ஆரம்பத்தில் பைக்கில் வைத்து விழிப்புணர்வு எல்லாம் ஏற்படுத்தினார்கள். இப்போது செந்தில்பாலாஜியை தொடர்ந்து பொன்முடிக்கு சிக்கல் வந்துள்ளதால் திமுகவில் உள்ள உடன்பிறப்புகள் அனைவரும் மாற்று கட்சியை தேடி செல்கின்றனர்.
இளைஞரணி மாநாடு என்ற பெயர் மட்டும் தான் இளைஞர்கள் எல்லாம் பாஜக பக்கம் அண்ணாமலை பின்னல் சென்று வருகின்றனர். இது எல்லாம் தெரிஞ்சா உதயநிதி செயல்பட்டுகிறார், படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு அதற்கு இணையத்தில் ரிவியூ கொடுத்து வருகிறார். இவருக்கு எப்படி மக்களின் கஷ்டம் தெரியவும் என அடுக்கடுக்காக விமர்சனத்தை முவைத்து வருகிறார் சவுக்கு சங்கள் அவர் சொல்வது முற்றிலும் உண்மை என கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.