
தமிழக அரசு மாணவர்களுக்கு படிப்பை கொடுப்பதில் மும்முரம் காட்டாமல் விழா நாட்களில் அரசு நடத்தும் மதுபான கடைகளில் மதுவை விற்பதில் டார்கெட் வைத்து நடத்துவதாக சமீபகாலமாக அரசின் மீது குற்றச்சாட்டு வந்த வண்ணம் உள்ளன. அதிலும், மது குடிப்பவர்களை குடிகாரர் என சொல்லவேடாம் என அந்த துறை சேர்ந்த அமைச்சர் மரியாதையாக அழைக்க வேண்டும் என் வக்காலத்து வாங்கும் இந்த ஆட்சியின் கீழ் மது மட்டும் கஞ்சா போதையில் சிக்கி பிறருக்கு பிரச்சனை உண்டாக்குவது தொடடர்கதையாக மாறி வருகிறது.
இந்நிலையில் தருமபுரி அருகே விவசாய நிலத்தில் மது அருந்திய இளைஞர்கள் அதனை அந்த இடத்தின் உரிமையாளர்கள் தட்டி கேட்டபொழுது அவரை தாக்கியுள்ளனர் அதில் அந்த விவசாயி இறந்துள்ளார்.இது தொடர்பாக அம்மாவட்ட காவலர் இரு சிறார்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் பிறந்த நாள் விழா கொண்டாடும் போது விவசாய நிலத்தின் உரிமையாளர் சரவணன் என்பவர் அவர்களை என் இடத்தில் இருந்து விரட்ட சொன்னதால் ஆத்திரமடைந்த அந்த மது பிரியர்கள் சரவணனை பதிலால் தாக்கியுள்ளனர் இதில் காயமடைந்த சரவணன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது இறந்துள்ளார் என கைதான இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும், அவர்கள் எல்லாம் மதுவை தாண்டி கஞ்சாவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், இதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், தனது விவசாய நிலத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்து பேரில் இரண்டு சிறார்களும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது. தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால், கொலைக் குற்றச் சம்பவங்கள் தொடர்கின்றன. பல்லடம் அருகே, குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தையே, மது போதையில் ஒரு கும்பல் கொலை செய்த சம்பவத்தின் சுவடு மறையும் முன்னரே, மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.
உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை செய்யும் திமுக அரசு, குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், கும்பலாக அமர்ந்து மது அருந்துவதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானால் என்ன, சாராய ஆலைகள் நடத்தும் திமுகவினருக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த ஆபத்தான போக்கு. தங்கள் கட்சியினருக்கு வருமானம் என்ற ஒரே நோக்கத்திற்காக, மது விற்பனையால் தொடரும் குற்றச் சம்பவங்களையும், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும், தடுக்க திமுக அரசு தவறினால், இதனால் ஏற்படும் விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல குற்ற சம்பவங்களும், கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் தமிழக அரசு நடத்தும் மதுபான கடையும் பள்ளி படிக்கும் இளைஞர்கள் வரை போதை பழக்கத்திற்கு காரணமாகி கிடக்கின்றனர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் விடுமுறை நாட்களில் மதுபான கடிக்கு டார்கெட் வைத்து விற்பனையில் ஈடுபடுவதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.