Cinema

விஜயகாந்த் மகனுக்கு கரம் நீட்டிய நடிகர்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Vishal, Shanmuga pandian
Vishal, Shanmuga pandian

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி இறந்த நிலையில் அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சினிமா துறையை சேர்ந்த பலரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கார்த்திக், புரதசி தளபதி விஷால் போன்றவர்கள் வெளிநாடுகளில் இருந்ததால் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது தமிநாட்டிற்கு வந்து நேரடியாக அவரது வீட்டிற்கும் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் என அறிவித்தனர். 


முன்னதாக நடிகர் ராகவா லாரென்ஸ்  விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உடன் இணையத்தில் விஜயகாந்த் மகனுக்காக நான் அவருடன் இணைந்து படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்தால் என்னையும் சேர்த்துக்கோங்க என்று கூறினார். இத்தகையை பேச்சு இணையத்தில் வைரலாக லாரன்சுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இதே முறையை நடிகர் விஷாலும் கையில் எடுத்ததால் அவருக்கு நெட்டிசன்களை சரமாரியாக கேள்வியை கேட்டு வருகிறன்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர்களை இயக்குனர்கள் விஜயகாந்த் குறித்து உருக்கமாக பேசினர். அப்போது நிகழ்ச்சியின் கடைசியில் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், “விஜயகாந்த் இயங்கிய நடிகர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக, பொதுச்செயலாளராக, தேமுதிகவுக்கு வாக்களித்தவனாக உங்களின் வருகைக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு உணவளித்தவர்; உணவில் எந்த பாரபட்சமும் பார்க்ககூடாது என எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு ஊக்கமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். 

பல நடிகர்கள் வளர வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த். அந்த வகையில் சண்முக பாண்டியனிடம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ‘உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசை இருந்தால் நான் வருகிறேன். என்னை பயன்படுத்திக்கொள்ள உனக்கு விருப்பம் இருந்தால் நானும் உன்னுடன் தூணாக இருந்து படத்தில் நடித்து தருகிறேன் என கூறினார். அடுத்ததாக பேசிய விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேசும் போது விஷால் அண்ணா நன்றி அண்ணா நீங்க கொடுத்த ஆஃபருக்கும் நன்றி என நினைவுப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக நெட்டிசன்களை விஷாலை கொட்டி தீர்க்கின்றனர்.

நெட்டிசன்கள், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் அர்ஜுன் காதாபாத்திரத்தில் முதலாவதாக விஷாலை தேர்வு செய்த்தனர். அந்த பாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என சொல்லி விலகிய விஷால் விஜய் உடனே வேண்டாம் என்று சொன்ன விஷால் எப்படி இதற்கு ஓகே சொல்லுவார் என கேள்வி கேட்டு வருகின்றனர். விஜய்காகிந் இறந்தபோது வெளிநாடுகளில் பெண்ணோட கூத்தடித்து வந்தவர் தான நீ? நடிகர் சங்க கட்டிடம்  எப்படி ரொம்ப வருடமாக கட்டாமல் இருப்பது போல் ராகவா லரென்ஸ் மற்றும் விஷால் பேசியதும் எப்போது சாத்தியமாகும் என்று பொறுத்திருந்து பாப்போம் என பதிவிட்டு வருகின்றனர். இந்த நினைவஞ்சலியில் காலம்த கொண்ட சரத்குமார் வடிவேலு விஜயகாந்த் இறந்தது அறிந்து வீட்டில் அழுத்திருப்பார் என்றும் நேரில் வந்தால் அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.