அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துக்கு துறையில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரை கைது செய்த அமலாக்கத்துறை சுமார் 6 மாதமாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மேல் முறையீடு செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக்கு துறையில் அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததன் அடிப்படையிலும் திமுகவின் இணைந்த உடன் மது துறையில் அமைச்சராக இருந்த போது மது துறையில் ஊழல் செய்ததாகவும் அமலாக்கத்துறைக்கு புகார் வந்தது அதன் பேரில் கடந்த ஜூன் மாதம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டவிரோத பண பரிமாற்றத்தில் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வந்தது உறுதியான நிலையில் அவரை கைது செய்த அமலாக்கத்துறை அப்போது நெஞ்சு வலி இருந்ததன் காரணமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதன் பின் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து அவர் மீது உள்ள குற்றங்களை அமலாக்கத்துறை 200 பக்கத்துக்கும் அதிகமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜியின் மனைவி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார் அந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து சிறையில் இருந்து வரும் அவரை விசாரித்த அமர்வு நீதிமன்றம் காவலை 11வது முறையாக நீட்டித்து டிசம்பர் 4ம் தேதி வரை சிறையில் இருக்க உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் கோரிய மனுவும் ரத்து செய்யப்பட்டது.
இந்த மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் விசாரணை நவ.,20ம் தேதி விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் செந்தில் பாலாஜிக்கு உடல் எடை குறைவு, அவர் மன அழுத்தத்தில் இருப்பதால் அவருக்கு ஜாமின் வேண்டும் என்று கோரினார். அமலாக்கத்துறை தரப்பு அமைச்சர் பதவியில் இருப்பதால் அவர் வேலோனியில் சென்றால் ஆதாரங்களை கலைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க இந்த வழக்கை நவ.,28ம் தேதி ஒத்திவைத்து. அதன் பிறகு செந்தில் பாலாஜி உடல்நிலை உபாதைகள் இருப்பதாக புழல் சிறையில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதாகவும் சிறையில் இருந்ததால் அவரது உடல் எடை குறைந்துள்ளது, அவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் கூட இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால் இந்த மருத்தவ காரணத்தை கூறி எப்படியாவது நீதிமன்றத்தில் ஜாமின் கொடுக்க வேண்டும் என்று திமுக முக்கிய தலைகள் நினைத்து வருகின்றனர். அதுவும் அமைச்சர் என்ற பதவியுடன் அவரை வெளியில் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகள் இலாக்கா இல்லாத துறையில் செந்தில் பாலாஜி இருந்தால் அவருக்கு ஜாமின் வழங்க யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் தலைமறைவாக உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டாம் என்றும் உறுதியாக இருக்கிறது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜி தரப்பில் மருத்துவ பரிசோதனையை காட்டி ஜாமின் வழங்க தீவிரமாக இறங்கியுள்ளாராம். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இரண்டு முறை இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று இந்த மனு முடிவுக்கு வரும் என திமுக உடன்பிறப்புகள் எதிர்பார்கின்றனர். ஆனால் அமலாக்கத்துறை திமுகவிற்கு மாறாக செந்தில் பாலாஜி மீது உள்ள புகார்களை மீண்டும் தெளிவு படுத்தி இந்த மனுவை ரத்து செய்ய முனைப்பு காட்டும் என்று வேறு தகவல் தெரிவிக்கின்றன.