24 special

உதயநிதி நெற்றியில் போடப்பட்ட சிலுவை.... அடுத்த சர்ச்சை வெடித்தது...!!!

udhayanithi
udhayanithi

 கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வரின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாட்டின் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று வைக்காமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று வைத்து உள்ளீர்கள் அதற்கு எனது பாராட்டுக்கள் ஏனென்றால் இதுபோன்ற கருத்துக்களை எதிர்க்க கூடாது ஒழித்து தான் ஆக வேண்டும்! அதாவது டெங்கு மலேரியா கொரோனா போன்ற நோய்களை நாம் எதிர்க்க கூடாது ஒழிக்கத்தான் வேண்டும் அப்படித்தான் இந்த சனாதனமும் இந்த சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்! என சனாதனம் பற்றி ஒரு புரிதல் இல்லாமல் தவறான கருத்துக்களை முன்வைத்து இதுதான் சனாதனம் என்று கூறி அவற்றை எதிர்த்து ஒழித்தே தீருவேன் என சபதமிட்டார். 


உதயநிதி இந்த கருத்தை மேடையில் தெரிவித்த பொழுது அவரது அருகிலேயே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உதயநிதியும் சனாதனையை எதிர்ப்பு பேச்சு இந்தியா முழுவதும் வலுப்பெற்றது பல எதிர்ப்புகளையும் பெற்றது அதில் ஒன்றாக உதயநிதியின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினித் சென்னை போலீசாரிடம் புகார் அளித்தார். இவரைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்பு பேச்சிற்கு பல புகார்கள் பதியப்பட்டது, பல கண்டனங்களும் எழுந்தது. அதுமட்டுமின்றி திமுகவின் நம்பிக்கை கூட்டணியான இந்தி கூட்டணியிலும் இவரது பேச்சு கடும் அதிருப்தியை பெற்றது. இருப்பினும் தனது சனாதன எதிர்ப்பு பேச்சை உதயநிதி நிறுத்தாமல் மேடை எங்கும் தெரிவித்து வந்தார்.

அதற்குப் பிறகுதான் சனாதனம் என்றால் என்ன? இந்த சனாதனத்தை குறித்து மாநில அரசான தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள பாட புத்தகத்திலும் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் சமூக வலைதளம் எங்கும் பரவி வைரலாக, சனாதனத்தை எதிர்த்து பேசும் கருத்துக்களை தற்சமயம் நிறுத்தி வைத்தி கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான 5 மாநில தேர்தல்களின் முடிவு பாஜகவிற்கு சாதகமாக அமைந்தது,  இதனால் காங்கிரஸ் கடும் தோல்வியை சந்தித்ததற்கு உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்பு கருத்துக்களே காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டதால் I.N.D.I கூட்டணிக்கு நடுவிலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்பு பேச்சு திமுகவிற்கும் I.N.D.I கூட்டணிக்கும் இடையில் ஆபத்தாக வந்துள்ள நிலையில், உதயநிதி நிகழ்ச்சி வீடியோ ஒன்று வைரலாக பரவுகிறது. 

அந்த வீடியோவில், உதயநிதி நிவாரண பொருள்களை மக்களுக்கு வழங்குகிறார், அப்பொழுது அந்த கூட்டத்தில் நிவாரண பொருள்களை வாங்கும் ஒரு பெண் உதயநிதி நெற்றியில் சிலுவை சின்னம் பதித்து ஆசிர்வதிக்கும் முறையில் நடந்துகொள்கிறார். உதயநிதியும் நெற்றியில் ஒரு பெண் சிலுவை போட அதை சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்கிறார். சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுபவர்! இப்படி சிரித்துக் கொண்டே சிலுவையை ஏற்றுக் கொள்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது இது மட்டுமல்லாமல், என் மனைவி கிறிஸ்தவர் கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் என உதயநிதி ஏற்கனவே கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில் தற்போது இதுவும் இணையத்தில் மிகப்பெரும் சர்ச்சையாகி உள்ளது.