24 special

என்ன அசிங்கப்படுத்தமா விட மாட்டீங்களா? ருத்திர தாண்டவம் ஆடிய விஜய்..... உடனடியாக விஜய் மக்கள் இயக்கம் செய்த காரியம்....

actor vijay, puzzy anand
actor vijay, puzzy anand

 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை மையப்படுத்தி தமிழக அரசியல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சமீப நாட்களாக நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் சார்ந்த பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஒட்டுமொத்தமாக விஜய் அரசியலில் இறங்குவது போன்ற திடீர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றிருந்தாலும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது இந்த நிலையில் விஜயின் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் 2026 பத்தி சொல்லுங்கனா என அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் இடம் கேட்க கப்பு முக்கியம் பிகிலு என்று தனது படத்தின் டயலாக்கை கூறினார், அதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டது இதனை அடுத்து எனக்கு மிகப்பெரிய ஆசை ஒன்று இருக்கு நண்பா நம் நாட்டில் எந்த இடத்தில் நன்மை செய்தாலும் அவற்றை நம்ம பசங்க தான் செஞ்சிருக்காங்க என்ற பேர் எனக்கு வேணும் என்று கூறி தனது ஆசையை தெரிவித்தார். 


இதனை அடுத்து கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழையால் சென்னை முழுவதும் மழை நீர் வெள்ளத்தில் தத்தளித்தது மழை நின்ற பிறகும் மழைநீர் அப்பகுதி முழுவதும் வடியாமல் மக்களின் அன்றாட வாழ்க்கையும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத பெரும் துயரத்தையும் சந்தித்து வந்தனர் இதனால் பல தன்னார்வ தொண்டுகள் கட்சிகள் தனியா நிறுவனங்கள் என தங்களால் முடிந்த ஒவ்வொரு உதவிகளையும் ஒவ்வொரு தரப்பினர் செய்து வரும் நிலையில் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பாக களத்தில் இறங்கி வேலை செய்யும்படி உத்தரவிட்டதை அடுத்து களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம் அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். 

அப்படி விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை ஒருவர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினால் மற்றொருவர் அருகிலேயே நின்று கொண்டு விஜயின் புகைப்படத்தை தூக்கி பிடித்தவாறு விளம்பரம் செய்து கொண்டிருந்தனர் இது மட்டும் இன்றி குப்பைகளை அகற்றுவது போன்று இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்த செயல்களும் விஜய்க்கு பெரும் விமர்சனத்தை பெற்று கொடுத்தது. இதுதான் உங்க பசங்க செய்ற நல்ல காரியம் உங்களுக்கு நல்ல பெயர் எடுத்து கொடுக்குறாங்க பாருங்க என்ற பல கமெண்ட்களும் இணையங்களில் பறந்தது! இதனை அடுத்து விஜய் புஸ்ஸி ஆனந்தை அழைத்து கண்டித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், புஸ்ஸி ஆனந்த தற்பொழுது புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது இனி நிவாரண பொருட்களில் விஜய் பெயர் இருக்கக்கூடாது ஏனென்றால் விஜயின் மக்கள் இயக்கம் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கி மக்களுக்கு உதவி செய்கிறது என்பது விஜய்க்கு தெரியும் அதனால் நிவாரண பொருள்களை வழங்கும்போது விஜயின் புகைப்படங்களை ஒட்டி வழங்கக் கூடாது என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார். இது குறித்து ஏன்? என விசாரித்த பொழுது தேர்தல் வரும் நேரத்தில் விளம்பரம் செய்வது பின்னடைவை ஏற்படுத்தும், தேர்தல் நேரத்தில் இது கூடாது என விஜய்யிடம் சிலர் கூறியதாகவும் அதன் காரணமாகவே விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் ஏற்கனவே மழை விவகாரத்தில் திமுக பின்னடைவை சந்திக்கும் நிலையில் குறிப்பாக உதயநிதியின் பெயர் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் நாமும் அதுபோல் கெட்டபெயரில் சிக்கிக் கொள்ள கூடாது என விஜய் கவனமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.