பிக் பாஸ் எனப்படும் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஏற்பாட்டின் பேரில் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதுவரை 6 சீசன்களை முடித்துவிட்டு தற்பொழுது ஏழாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனில் இருந்து கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்! நடிப்பு, அரசியல் என அவ்வப்போது சென்று வரும் கமலஹாசனுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பெருமளவில் விளம்பரத்தை தருகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த போட்டி முதலில் ஆரம்பித்தவுடன் போட்டியாளர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை மையமாக வைத்து வாரம் தோறும் ஓட்டுக்களின் மூலம் அவர்களை எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்த சீசன் தொடங்கியதும் பெரும் அளவிற்கு வாக்கு கொடுத்து மக்கள் இடத்தில நீங்காத இடத்தை பிடித்தவர் பிரதீப் அவரை பிக் பாஸ் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது ரசிகர்களை மற்றும் பொதுமக்கள் பிக் பாஸ்க்கு எதிராகவும் கமல்ஹாசனை மொத்தமாக ட்ரோல் செய்து இணையத்தில் தெரிவிக்கப்பட்டனர். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி காண பார்வையாளர்கள் குறைந்து சென்றனர். மேலும், இந்த நிகழ்ச்சி தடை செய்யவேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தனர். குறிப்பாக அரசியல் தலைவர் வேல்முருகன் நிகழ்ச்சியை தடை செய்யவில்லை என்றால் அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்தை முற்றுகையிடுவதாக கூறினார்.
தொடர்ந்து கமல் ஹாசன் அரசியல் கட்சி தலைவர் தானே எதற்காக இந்த நிகழ்ச்சியை அவர் ஊக்குவிக்கிறார், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் மக்களுக்கு சேவை செய்ய முழுமையாக தன்னை அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார்கள் ஆனால், கமல் ஹாசன் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என மாறி மாறி செயல்படுத்தி வருகிறார். இதற்கு பலரும் விமர்சனத்தை முன் வைத்தனர், குறிப்பாக அரசியலில் இருக்கும் கமல் எதற்காக இரட்டை வேஷம் போடுகிறார் எதோ ஒரு துறையில் சாதித்த போதாதா எனபது போல் பேசினார்கள். இதற்கெல்லாம் செவி சாய்க்காத கமல் ஹாசன் தான் சம்பாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 ஓடு மூட்டை கட்டி விட்டு சினிமாவில் கவனம் செலுத்தலாம் என தகவல் கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த சீசன் பாதியில் இருந்து வெளியேறி சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் நடிகர் கமல்ஹாசன் என தகவல் தொடர்ந்து வருகிறது. எப்போதும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தான் இணையவாசிகள் தாறுமாறாக கலாய்த்து வருவார்கள். இப்போது அதற்கு மாறாக போட்டியில் தொகுப்பாளர் கமல்ஹாசனை மொத்தமாக வெளியனுப்ப முடிவு எடுத்து விட்டார்களாம் இணையவாசிகள். அதாவது, எப்போது பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினரோ அப்போது இருந்தே குறி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் போது பெண்கள் பயன்படுத்தும் உடைகளை பயன்படுத்தினார் அவர் தான் உடையை மாற்றி போட்டு வந்து விட்டதாக அவரே கூறினார். அதனை தொடர்ந்து பெண் போட்டியாளர்க்கு ஒருமையில் துணை நிற்பதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து தான் அதிகமாக ட்ரோ செய்யப்படுவதால் நிகழ்ச்சியில் இருந்து முழுமையாக வெளியேறலாம் என முடிவு எடுத்து விட்டதாக தகவல் கூறப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது மூன்று படங்கள் வரிசையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.