தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துணை வேந்தர் நியமனம் குறித்து தமிழக அரசின் செயல்பாடு குறித்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார், அரசு கொள்கை முடிவுகளை எடுக்கும்போது எவரும் தலையிட மாட்டார்கள். ஆனால் அந்தக் கொள்கை முடிவு, கொள்ளை முடிவாக மாறும் போது ஆளுனரோ மத்திய அரசோ தலையிட்டுத் தான் ஆக வேண்டும்.
மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்போது ஆளுனரோ மத்திய அரசோ தலையிட்டுத் தான் ஆக வேண்டும். பல்கலைக்கழகங்களின் இறையாண்மை, ஆளுமைத் திறன் பாதிக்கப்படும்போது ஆளுனரோ மத்திய அரசோ தலையிட்டுத் தான் ஆக வேண்டும். பல்கலைக்கழகங்கள் பலவழிப்பணபேரக் கழகங்களாக மாறும் போது ஆளுனரோ மத்திய அரசோ தலையிட்டுத் தான் ஆக வேண்டும் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாயற்றும் போது, "கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய மாநில அரசுக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் (...வரவேண்டிய நிதியில்!...?) பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" இன்று அதன் வருத்தத்தை சட்ட மன்றத்தில் பதிவு செய்துவிட்டேன் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
ஆளுநர் அவர்களின் அறிவிப்பின்படி, துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் ஆய்வுக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதில் தமிழக அரசின் பிரதிநிதியாக ஒருவரும், பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழுவின் syndicate member உறுப்பினர் ஒருவரும், ஆளுநரால் நியமிக்கப்படும் கல்வியாளர் ஒருவரும் என இம்மூன்று பேரும் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வார்கள்.
ஆக இம்மூவர் குழுவில், இருவர் தமிழக அரசின் பிரதிநிதிகளாகத் தான் இடம் பெறுகிறார்கள். இதில் மாநில அரசின் உரிமை எங்கே மறுக்கப்படுகிறது என்பது நமக்கு புரியவில்லை. தனி நபரால் ஏற்படும் தவறுகளை சரி செய்ய, கல்வியாளர் குழு அமைப்பது எந்த வகையில்!... எதை பாதிக்கும்!... செயலாகும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
அரசு கொள்கை முடிவுகளை எடுக்கும்போது எவரும் தலையிட மாட்டார்கள். ஆனால் அந்தக் கொள்கை முடிவு, கொள்ளை முடிவாக மாறும் போது ஆளுனரோ மத்திய அரசோ தலையிட்டுத் தான் ஆக வேண்டும். மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்போது ஆளுனரோ மத்திய அரசோ தலையிட்டுத் தான் ஆக வேண்டும்.
பல்கலைக்கழகங்களின் இறையாண்மை, ஆளுமைத் திறன் பாதிக்கப்படும்போது ஆளுனரோ மத்திய அரசோ தலையிட்டுத் தான் ஆக வேண்டும்.பல்கலைக்கழகங்கள் பலவழிப்பணபேரக் கழகங்களாக மாறும் போது ஆளுனரோ மத்திய அரசோ தலையிட்டுத் தான் ஆக வேண்டும்.
தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது, வியப்பைத் தரவில்லை. மாறாக ஆளும் தி.மு.க-வின் ஊழலுக்கு துணை போகும் ஆர்வத்தையே வெளிப்படுத்துகிறது.
கல்வி ஞானத்தில், சிறந்து விளங்கிய அறிஞர்களை, தேர்வு செய்த வரையில், அவர்கள் வணக்கத்துக்குரியவர்களாகவும், வேந்தர்கள் என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டனர்.
ஆனால் எப்போது ஆட்சியில் உள்ள மாநில அரசால், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விலைப்புள்ளி நிர்ணயிக்கப்பட்டதோ, அதிக விலை புள்ளிக்கு துணைவேந்தர் பதவி ஏலம் போனதோ, அப்போதே கல்வியின் தரமும், மாணவர்களின் எதிர்காலமும், கேள்விக்குறி ஆக்கப்பட்டது.கொடுத்த பெருந்தொகையை, திருப்பி எடுப்பதற்காக, தகுதியற்றவர்கள், திறமையற்றவர்கள், பல்வேறு பல்கலைக்கழக பதவிகளில் அமர்த்தப்பட்டனர். பல்கலைக்கழகத்தில் நிதி முறைகேடுகள் சர்ச்சைகளுக்கு உள்ளாகின.
பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராஜாராம் மற்றும் கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி உட்பட பல துணைவேந்தர்கள் லஞ்ச , ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையிலோ அல்லது பிணையிலோ உள்ளனர் என்பதை சிந்தித்து பார்க்க மறுக்கிறார் தமிழக முதல்வர்.
இந்தியாவிலேயே ஊழல் குற்றத்திற்காக பல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஜெயலிலோ பெயிலிலோ இருப்பது தமிழகத்தில் மட்டும் தான் என்பது வெட்கக்கேடானது.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், கல்வி கொள்ளையர்களின் கூடாரங்களாக செயல்பட்டு வந்ததை முதல்வர் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா? துணைவேந்தர் பதவிக்கு பல கோடிகள், துணை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் பல லட்சக்கணக்கில் லஞ்சம், மாணவர்களின் அனுமதிகளில், தேர்வில், தேர்ச்சியில் முறைகேடுகள், நாற்காலிகள் வாங்குவதில் கூட லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக ஊழல்கள் பெருமளவில் நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள் கவலைக்கிடமாக கிடந்தன.
இதை எல்லாம் சரி செய்வதற்காக இழந்த பெருமைகளை மீட்டெடுப்பதற்காக. பல்கலைக்கழகங்களின் வேந்தராகச் செயல்படும் ஆளுநர் அவர்கள், ஒரு திறன் வாய்ந்த வல்லுநர் குழுவை அமைத்து, அரசியல் சார்பில்லாமல், தகுதியான ஒரு துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும், ஒரு ஒழுங்கு முறையை உருவாக்குவதுதானே மாநில நலனுக்கும், மாணவர்களின் நலனுக்கும் உகந்ததாக இருக்கும்?
எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற எண்ணத்தோடு, துணைவேந்தர் பதவி என்பது பணம் காய்க்கும் மரம் என்ற கொள்கையோடு, தகுதியற்ற, திறமையற்ற, முறைகேடான நிர்வாகத்தை அளித்த ஊழல் நபர்களை துணைவேந்தர்களாக நியமித்ததன் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியவர்கள், மீண்டும் தமிழக மாணவர்களை சீர்கேட்டை நோக்கி இட்டுச் செல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் விளையாடிய அரசியல் வியாபாரம், தமிழகத்தை மட்டுமல்ல, கல்வி துறையையே கடுமையாக சீர்குலைத்தது. மாணவர்களுக்கு, பெற்றோருக்கு நம்பிக்கையை விளைவிக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் நம்பிக்கையின்மையையும், மோசடியையும் வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்நிலையில் துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக திறமை வாய்ந்த வேற்று மாநிலத்தவரை நியமித்து, உண்மையிலேயே தகுதி வாய்ந்த ஒருவரை துணைவேந்தராக்கும் ஆளுநரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது. ஊழல் எனும் சாக்கடையில் ஊறி திளைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகங்கள், சில வருடங்களாக, பல்கலைக்கழக வேந்தரான, தமிழக ஆளுநரின் வழிகாட்டுதலில் புனிதம் பெற்று வருகிறது. இதிலும் மாநில உரிமைகள், மொழி என்னும் குறுகிய உள்நோக்க அரசியலை புகுத்தி, ஊழலை தொடர்வதற்கான ஆதரவுக்குரலை எழுப்பும் அரசியல்வாதிகள், வருங்கால தலைமுறைக்கு மிக பெரும் துரோகத்தை செய்பவர்களாகவே கருதப்படுவார்கள்.
எப்போதெல்லாம் கல்வியில் அரசியல் கலக்கிறதோ, அப்போதெல்லாம் கல்வியும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே கல்வி நிறுவனங்கள், அரசியல் சார்பற்று இருக்க வேண்டும் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலையை உருவாக்க ஆளுநர் அவர்கள் முயற்சிக்கிறார் என்றால்....!அதற்கு எதிராக மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்றால்...! எது சரி? எவர் சரி ? என்ற முடிவினை மக்களே செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.