மேயர் பிரியா ராஜன் அவ்வப்போது பொதுவெளியில் பேசும் சில விஷயங்கள் சர்ச்சையாவது மட்டுமல்லாமல் இணையத்தில் வைரலாக உலா வருவதும் உண்டு இதன் காரணமாகவும் கூட திமுக அரசிற்கு சில இடங்களில் அவப்பெயர் ஏற்படுகிறது என அறிவாலய வட்டாரங்களில் கூறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த மாதம் சென்னையில் செய்த கனமழையின் பொழுது மக்கள் மக்கள் 3 தினங்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள் அந்த சமயத்தில் மேயர் பிரியா ராஜன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும் மழை எல்லாம் அடங்கி சுமூக நிலை திரும்பிய பிறகு சென்னை திரும்பியதும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டதாக அறிவாலய தரப்பு உணர்ந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், தற்போது அன்றாட சமையலுக்கு மிக முக்கியமான காய்கறியாக உள்ள தக்காளியின் விலை உயர்ந்துள்ளது எந்த அளவுக்கு என்றால் சிக்கன் பிரியாணி கூட போட்டு விடலாம் ஆனால் தக்காளி சாதமா அவ்வளவு பணக்காரர்களா நீங்கள் என்று மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பறக்கும் அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.
இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதால் அரசே தக்காளியை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் பிரியா ராஜனிடம் தக்காளியின் விலை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறிய பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேயர் பிரியா ராஜன் நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை கல்வி சுற்றுலாவிற்காக அனுப்பி வைத்துவிட்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். முதலில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள், மாமன்னன் படம் பார்த்து விட்டீர்களா என்ற கேள்விக்கு படம் அருமையாக வந்திருக்கிறது திராவிட மாடல் அரசு சமூக நீதியை நிலை நாட்டும் அரசாக இருந்து வருகிறது அதனை உதய் அண்ணா படத்தில் காட்டி இருக்கிறார் என்று மிகவும் மகிழ்ச்சியாக பதில் அளித்தார் மேயர் பிரியா ராஜன்.
பிறகு தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது அதனை குறைப்பதற்காக மாநகராட்சியில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் திட்டம் எதுவும் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு! தக்காளி என்னோட டிபார்ட்மெண்டே இல்லைங்க ஸ்கூல் பத்தி கேளுங்க வடிகால் பத்தி கேளுங்க சொல்றேன் தக்காளி பத்தி எனக்கு எதுவும் தெரியாது என்று சிரித்துக் கொண்டு பேசி மழுப்பி அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
ஏற்கனவே திமுக அரசின் மீது தொடர்ந்து அவப்பெயர்கள் இருந்து வரும் நிலையில் தற்போது மேயர் பிரியா ராஜன் தக்காளி விலை பற்றிய கேள்விக்கு அலட்சியமாக பேசி இருப்பது திமுக அரசுக்கு மேலும் சில அவப்பெயர்களை ஏற்படுத்தி உள்ளதால் பிரியா ராஜனுக்கு அறிவாலயத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இனிமேல் பொதுவெளியில் நீங்கள் செய்தியாளர்களிடம் அதிகம் பேச வேண்டாம் அமைதியாக நின்றாலே போதும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு பறந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு முன்னதாகவே மேயர் பிரியா ராஜன் மேயராக பதவியேற்ற சில தினங்களுக்கு பிறகு கே என் நேரு அவரை ஒருமையில் பேசினார் என்று சர்ச்சை எழுந்தது. பிறகு அமைச்சர் சேகர்பாபுவிற்கு குடை பிடித்தார் என்பதும், சென்னையில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக வருகை புரிந்த முதல்வரின் காரில் தொங்கியபடி சென்று சர்ச்சையானதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர் நிகழ்வுகளால் தலைமையிடம் இருந்து சிறிதுகாலம் அமைதிகாக்கும்படி வாய்மொழி உத்தரவு பிறந்துள்ளதாம்!