செந்தில் பாலாஜியை எப்படியாவது மருத்துவமனையில் இருந்து தங்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக செந்தில் பாலாஜியை கைது செய்யும் பொழுது நடைமுறைகளை முறையாக பின்பற்றினோம் என்று ஆதாரங்களை சமர்ப்பித்ததால் செந்தில் பாலாஜி தரப்பு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையின் பொழுதும் அமலாக்கத்துறை சிறப்பான வாதங்களை முன்வைத்து இதற்கு மேல் என்ன ஆதாரங்களை காட்டி செந்தில் பாலாஜியை காப்பாற்றப் போகிறீர்கள் என்று அமலாக்கத்துறை சவால் விடும் அளவிற்கு அவர்களது வாதங்கள் இருந்தது என்றே கூறலாம். இந்த நிலையில் செந்தில் பாலாஜி பற்றிய ஆதாரங்களை இன்னும் அதிக அளவு திரட்டினால் நமது விசாரணைக்கு உதவும் என்பதற்காக செந்தில் பாலாஜியை பிடித்தாலும் ஒன்றுதான் அவரது தம்பி அசோக்குமார் பற்றி ஆதாரங்களை சேகரித்து அவரை பிடித்தாலும் ஒன்றுதான் என செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவர்களுக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது.
சம்மன் அனுப்பியதற்கு பிறகு செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமுறை ஆகிவிட்டார் என தகவல்கள் தெரிவித்தன, பிறகு இந்த சம்மன் பற்றிய விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருப்பதாகவும், தற்போது நேரில் வர முடியாது என்றும் அமலாக்க துறையின் சம்மனுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் எனவும் செந்தில்பாலாஜி தரப்பில் கூறப்பட்டது. நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆவதற்கு செந்தில் பாலாஜி சகோதரர் கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது என பல்வேறு தரப்பிலும் பேச்சுக்கள் அடிபட்ட இந்நிலையில் நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்று யோசித்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விடக்கூடாது என்பதற்காக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீசை வழங்கி உள்ளது. ஒருவேளை அவர் வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றால் உடனடியாக கைது செய்யப்படுவார் என்பதே இதன் அர்த்தமாகும்.
முன்னதாக கரூரில் ஏராளமான நண்பர்கள் பட்டாளத்துடன் அவர்களை பினாமியாக பயன்படுத்திக் கொண்டு செந்தில் பாலாஜி இருந்துள்ளார் அதில் சங்கரான் மற்றும் அம்மன் மெஸ் கணேஷ் என்பவர்கள் முக்கியமானவர்கள். அதனாலயே அவர்கள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது அச்சோதனையில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் பண பரிவர்த்தனை பற்றிய அனைத்து தகவலையும் தெரிந்து கொள்வதற்காக கணக்காளர் சோபனாவைவிடம் வருமானவரித்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு இடத்திலும் சேகரித்த ஒவ்வொரு ஆவணங்களையும் அடிப்படையாக வைத்தே செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையில் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரும் பலமாக அனைத்து பணம் மற்றும் படைபலங்களை தன் பக்கம் வைத்துக் கொள்வதற்காக செயல்பட்ட அவரது சகோதரர் அசோக்கையும் கைது செய்வதற்கு தற்போது அமலாக்கத்துறை இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் செந்தில் பாலாஜியின் மீது மற்றொரு வழக்கை தாக்கல் செய்வதற்காக தற்போது மூத்த வழக்கறிஞர்களுடன் அமலாக்கத்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது வெளிவந்த இந்த தகவலால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் செந்தில் பாலாஜி சகோதரர் பாஸ்போர்ட் எண்கள் மற்றும் இதர தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் எங்கேயாவது தப்ப முயன்றால் உடனடியாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.