24 special

லியோ படத்தால் உரிமையாளருக்கு லாபம் இல்லை...திருப்பூர் சுப்பிரமணியன் அதிரடி!

vijaiy
vijaiy

விஜய் நடித்த லியோ திரைப்படம் 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு உண்மைதானா என்ற கேள்வியை தமிழ்நாடு திரையரங்கம் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் எழுப்பி உள்ளார்.  


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த படம் 'லியோ' இந்த படம் கடந்த வாரம் 19ம் தேதி வெளியானது. இந்த வெளியான நாள் முதல் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. 

லியோ படம் வெளியான முதல் நாளே ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் வசூலை முறியடித்து லியோ படம் 148.5 கோடி வசூலை ஈட்டியதாகவும் கூறப்பட்டது. ஆனால் உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் மட்டுமே வெளியான லியோ எப்படி முதல் நாளில் 148 கோடி வசூல் செய்திருக்கும் என்ற கேள்வி ஏற்கனவே எழுப்பப்பட்டது. ஆயுதபூஜை, மற்றும் விடுமுறை நாட்களை கொண்டு வெளியாகி படம் முதல் ஆறு நாட்களுக்கு  ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது உண்மைதான். ஆனால், மற்ற நாட்களில் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றும் தியேட்டரில் கூட்டம் வரவில்லை மேலும் படம் ஒடாமல் இருந்த நிலையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் படம் சுமாராக தான் இருக்கிறது என்று அனைவரும் கூறிய நிலையில் படம் வெளியாகி ஏழாவது நாளான நேற்று படத்தின் இதுவரை பெற்ற வசூலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது. அதாவது 7 நாட்களில் 461 கோடி தாண்டியதாக அறிவித்திருந்தது. இதனை ரசிகர்களும் சமூக தளத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் இந்த படம் எதிர்பாராத வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான்.

இந்நிலையில் லியோ படம் பல கோடி வசூல் செய்து வந்தாலும், அந்த படத்தினால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சு்பபிரமணியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில்,

இதுவரை தமிழ்நாட்டில் 80 சதவீதம் ஷேரை தயாரிப்பு நிறுவனம் வங்கியுள்ளதாக கூறினார். அண்டை மாநிலத்தில் 60 சதவீதம் ஷேர் வங்கிஉள்ளனர் இது எந்த விதத்தில் நியாயம்?  இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டிருந்தால் நியாயமாக இருந்திருப்பார்கள். செவன் ஸ்கிரீன் நிறுவனம் ஒரு படத்திற்கே இப்படி கேட்கிறார்கள் என்றால் தமிழ் சினிமா இவர்கள் கையில் இருந்தால் என்ன செய்வார்கள்? லியோ படத்துடன் வேறு ஒரு படம் போட்டிக்கு வெளியாகி இருந்தால் லியோ படத்திற்கு குறைவான தியேட்டர்கள் தான் கிடைத்திருக்கும்.

தமிழ்க்கட்டத்தில் லியோ படத்தை விருப்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் எடுக்கவில்லை. தீபாவளி வரை இனி புதிய படங்கள் வெளியாகாது அதுவரை தியேட்டரை பூட்டி வைத்திருக்க முடியுமா? அதனால் தான் லியோ படத்தை வெளியிட்டனர். இதை பயன்படுத்திக்கொண்டு லலித் குமார் அதிகமாக பங்கு கேட்டு தியேட்டர் உரிமையாளர்களின் லாபம் கிடைக்காமல் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார். 

படம் வெளியாகி பாதி திரையரங்கில் வேறு படத்தை போடும் நிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் ரசிகர்கள் 500 கோடி 100 கோடி என்று எவ்வளவு உருட்டு உருட்டினாலும் இனி வேலைக்காகாது. ஏனெனில் தியேட்டர் உரிமையாளர்கள் லியோ படத்தினால் எங்களுக்கு எந்த வித லாபம் கிடையாது தலையில் துண்டு போடும் நிலைக்கு வந்து விட்டதாக புலம்ப ஆரம்பித்துள்ளனர். இன்னும் படம் 1000 கோடி வசூல் செய்ய என்று தயாரிப்பாளர் வடை சுட்டாலும் நம்புவதற்கு தயாராக இல்லை மக்கள்.