Tamilnadu

போலி செய்தி விவகாரம் கிழி கிழியென கிழித்த ஊடக உரிமையாளர் !

Annamalai
Annamalai

அண்ணாமலை குறித்து போலி செய்தியை பரப்பி தனது பெயரை இழந்துள்ளது மாலை முரசு எனும் 24 மணி நேர செய்தி நிறுவனம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை என்று கூறியதாக மாலை முரசு செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியை உண்மை என நம்பிய பலர் விமர்சனம் செய்ய தொடங்கினர் போதாத குறைக்கு வேறு சில இணைய தளங்களும் போலி செய்தியை பரப்பினர், இந்த சூழலில் அண்ணா மலை தரப்பு போலி செய்தி வெளியிட்ட ஊடகத்தை தொடர்பு கொண்டு ஏன் நாங்கள் சொல்லாத ஒரு செய்தியை போலியாக வெளியிட்டீர்கள் என விளக்கம் கேட்க முதலில் செக் செய்துவிட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள் அந்த ஊடக தரப்பு.


இதையடுத்து அண்ணாமலை தரப்பு  தங்கள் விளக்கத்தை நேரடியாக அந்த ஊடகத்தின் நிறுவகிக்கும் ஒருவருக்கு அழைத்து, ஊடகங்கள் எப்போதும் நேர்மையாக செய்திகளை கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனால் கண் எதிரே போலியான செய்தியை பரப்புகிறது எந்த வகையில் நியாயம் எனவும் சொல்லாத ஒரு செய்தியை வீடியோவாக பதிவு செய்து மக்களிடம் பரப்புவது தவறு இல்லையா?

என கேட்டு இருக்கிறார்கள் இதையடுத்து எதன் அடிப்படையில் அண்ணாமலை மீன் சாப்பிடுபவர்கள் அனைவரும் இந்துக்கள் இல்லை என செய்தி வெளியிட்டீர்கள் என ஊடக நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் தனது நிறுவனத்தில் அரசியல் பிரிவு செய்திகளை வெளியிடும் நபரை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அவர்களால் பதில் கொடுக்க இயலவில்லை.

எந்த செய்தி வெளியிட்டாலும் உண்மை செய்தியாக இருக்க வேண்டும் என உங்களுக்கு தெரியாதா? நாளை நாம் போலி செய்தி வெளியிட்டோம் என மக்களுக்கு தெரிந்தால் ஊடகத்தின் மதிப்பு குறையாதா? என வெளுத்து எடுத்து இருக்கிறார் அந்த ஊடக முதலாளி. இது ஒரு புறம் என்றால் நாளை செய்தியாளர் சந்திப்பில் மாலை முரசு நிருபரை அண்ணாமலை என்ன கேள்வி கேட்க போகிறார் என்ற அதிர்ச்சியும் அந்த நிறுவனத்திற்கு உள்ளதாம். மொத்தத்தில் செந்தில் பணியாற்றும் நிறுவனம் போலியாக செய்தியை பரப்பவில்லை என்றால்தான் "ஆச்சர்யம்" என்று பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.