பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆட்டு குட்டி என விமர்சனம் செய்வதால் ஆடு மாடுகளை குல தொழிலாக செய்துவரும் சமூகங்கள் பாஜகவிற்கு ஆதரவாக திரும்பி வருவதாகவும், அவ்வாறு விமர்சனம் செய்யும் நபர்கள் சமூக நீதி என பேசுவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர் கால்நடைகள் வளர்ப்போர்.
இந்த சூழலில் ராஜேஷ் ஜெயராமன் என்பவர் ஒரு பதிலை கொடுத்துள்ளார் அது பின்வருமாறு :-திரு அண்ணாமலை என்றில்லை எந்த ஒரு அரசியல் பிரமுகரையும் விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் உண்டு ஆனால் அது நாகரீகமாக இருக்க வேண்டும் உண்மையைத் தழுவி இருக்க வேண்டும் நீங்கள் அவர் மேல் வைக்கும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், எடுத்து வைக்கும் தரவுகள் முதலியன அவர் ஆதரவாளர்களையே உங்கள் பக்கம் சுண்டி இழுப்பது போல் இருக்க வேண்டும்.
ஆனால் உலக சமூக நீதியின் தலைமை அலுவலகம் (The head office of social justice) உள்ள தமிழகத்தில் அவர் மேல் வைக்கும் விமர்சனங்கள் சர்வதேச அளவில் உள்ளன 1) அடேய் ஆட்டுக்குட்டி. 2) டேய் ஆடு.. 3) ஆட்டுக்கார பயலே.
மரியாதை குறைவான வார்த்தைகளைக் கூட விட்டு விடுவோம். ஆனால் எந்த ஒருவரையும் தொழிலின் அடிப்படையிலோ, நிறத்தின் அடிப்படையிலோ, பிறப்பின் அடிப்படையிலோ, பிறந்த சமூகம்/மதம் அடிப்படையிலோ ஒரு நாளும் இகழக் கூடாது என்பதுதான் சமூகநீதியின் முதற்படி.ஆனால் இந்த சமூகநீதி காவலர்கள் தங்கள் விமர்சனத்தை தொடங்குவதே இந்த முறையில் தான்..
இதில் பாதி நபர்கள் நன்கு படித்தவர்கள் அதில் கணிசமானவர்கள் மருத்துவர்கள் அது சரி..உங்கள் நிலைமை புரிகிறது...
1) மூன்று ஆண்டுகள் முன்பு வரை மிகச் சாதாரண வாழ்க்கையை நடத்தியவர் அண்ணாமலை... ஆனால் இன்று அவருக்கு 15 malls, 25 Binami petrol bunks, லண்டனில் 13 சொகுசு Bungalows இருக்கின்றன..இது எப்படி? - என்றா விமர்சிக்க முடியும்முடியாது ஏனென்றால் அவர் அப்படி செய்யவில்லை இனியும் செய்ய மாட்டார்.
2) மத்திய தலைமை இடத்தை தாஜா செய்து தன் செல்வாக்கை வைத்து தன் குடும்பத்தார் 10 பேருக்கு 2500 கோடிக்கு பங்குகள் வாங்கியுள்ளார்..இது எப்படி? என்றா விமர்சிக்க முடியும்? முடியாது ..ஏனென்றால் அவர் அப்படி செய்யவில்லை...இனியும் செய்ய மாட்டார். 3) இந்த தமிழ் மொழி ஒரு சனியன்...அது தொலைந்தால்தான் உருப்படும் - என்றா பேசினார்? இல்லை ..இனியும் அப்படி செய்ய மாட்டார்..மொழியாலும் விமர்சிக்க முடியாது .
4) நீங்கள் எந்நேரமும் வெறுப்பை உமிழும் சமூகத்தில் இருந்தும் அவர் வரவில்லை...அதனால் அதை வைத்தும் அவரை இகழ முடியாது. வேறு என்னதான் செய்வது? அடுத்து இருப்பது அவர் தொழில்தான்.
அதனால் அவரை இப்படித்தான் உங்களால் விமர்சனம் செய்ய முடியும்.... செய்யுங்கள் தொடருங்கள் ஆனால் ஒரே ஒரு முறை கண்ணாடியில் பார்த்து "நான்தான் சமூக நீதி காவலன்" என்று சொல்லிவிட்டுச் செய்யுங்கள் அது தானாகவே உடைந்து நொறுங்கும் நொறுங்கிய சிதில்கள் உங்களைப் பார்த்து எள்ளி நகைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று ஒரு தொழிலை மையமாக கொண்டு அண்ணாமலையை விமர்சனம் செய்தால் நாளை ஆடு மாடுகளை நம்பி தொழில் செய்யும் சமூகங்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக திரும்பும் என்பதால் அடக்கி வாசிக்க சொல்லி திமுக தலைமை முக்கிய நிர்வாகிகளுக்கு குறிப்பாக இணைய ஊடகத்திற்கு அறிவுறுத்தி வருகிறதாம்.