24 special

நீதிபதி கொடுத்த "பேட்டி" ஆடி போயிருக்கும் சைலேந்திரபாபு... தமிழகத்தில் பெரும் பதற்றம்..!

Silenthrababu
Silenthrababu

கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த சிலர் தமிழகத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டத்தின் போது சில மத வெறியர்கள் ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.


பிஹாரில் ஒரு நீதிபதியை எப்படி கொலை செய்தார்கள் என நியாபகம் வைத்து கொண்டு தீர்ப்பு கொடுங்கள் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர், இந்த வீடியோ நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது, குறிப்பாக நீதி துறையில் பணியாற்றும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டு செய்துள்ளது.

இந்த சூழலில் பல்வேறு நபர்களும் புகார் கொடுக்க மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யபட்டான் அதே வேலையில் கர்நாடக காவல்துறையும் நேரடியாக தமிழகம் வந்து மூவரை கைது செய்தது, இந்த சூழலில் தமிழகமா சுடுகாடா என ஒரு நீதிபதி கொந்தளித்து இருக்கிறார். இது குறித்து அவர் விமான நிலையத்தில் கொடுத்த பேட்டியில் நீதி துறையை மிரட்டும் அளவிற்கு தைரியம் அவனுக்கு எங்கு இருந்து வந்தது.

தமிழகமா இது சுடுகாடா எனவும் வேதனை தெரிவித்துள்ளார் அத்துடன் இப்படி ஒவ்வொறு மதத்தினரும் கிளம்பினால் எப்படி சமூகத்தை நடத்த முடியும் என ஆவேசமாக அவர் கேள்வி எழுப்பினார், இந்த சூழலில்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்க்கெட்டு வருவதாக நாடு முழுவதும் கடும் அதிருப்தி உண்டாகி இருக்கிறது.

வெளிப்படையாக நீதிபதிகளை கொலை செய்வோம் என பேசும் கூட்டத்திற்கு எப்படி தமிழக காவல்துறை அனுமதி கொடுத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது? இதற்கிடையில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாலுவார் சைலேந்திரபாபு என நினைத்து தான் மத்திய தேர்வாணயம் சட்டம் ஒழுங்கு டிஜிபி தேர்வில் சைலேந்திரபாபு பெயரை டிக் செய்தது.

ஆனால் இப்போது தமிழகத்தில் நீதிபதிகளுக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதால் டிஜிபி மீது கடும் அதிருப்தியில் நீதி துறை இருக்கிறதாம், விரைவில் இந்த விவகாரம் குறித்து ஆளுநர் நேரடியாக டிஜிபியை அழைத்து விளக்கம் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது தொடர் சட்டம் ஒழுங்கு பாதிப்பு காரணமாக டிஜிபி சைலேந்திரபாபு என்ன செய்வது என்று பதற்றத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன .நீதிபதி அளித்த பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது.