
கடந்த சில நாட்களாகவே ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு பெற தொடங்கியிருக்கின்றது. இதற்கான காரணம் இத்துறை மீது மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவது தான். வர்த்தகத் துறையை பொறுத்த வரையில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ததில் 10% உயர்ந்து இருக்கின்றது. இந்த வருடம் மட்டும் 35 சதவீதம் ஏற்றம் கண்டு இருக்கின்றது. மேலும் வரும் காலங்களிலும் இத்துறையில் அதிக ஏற்ற இருக்கவே வாய்ப்பு அதிகம்.
கடந்த பத்து ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறையில் ஒரு நிலையான தன்மையை கொண்டு இருக்கின்றது அதாவது உயர்ந்து வருகிறது. அரசும் இத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திடுகிறது. இப்படியான நிலையில் ஐடி துறையில் கடந்த சில மாதங்களாக வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. அவருடைய சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக முதலீடு செய்ய தீர்ர்மானிக்கும் போது அவர்கள் தேர்வுசெய்யும் துறை ரியல் எஸ்டேட் துறை தான். எனவே குடியிருப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ரியல் எஸ்டேட் துறையில் பலரும் முதலீடு செய்து ஒரு வலுவான வளர்ச்சியை காண முடிவெடுக்கின்றனர்.
தற்போது உள்ள கரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஒரு கலாச்சார மக்களிடையே இருக்கின்றது. எனவே அவர்களுடைய வருமானமும் பெருகி இருப்பதால் நடுத்தர மக்களும் இத்துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் வணிக ரீதியிலும் முதலீடு செய்ய ஆர்வம் காண்பிக்கின்றனர். எனவே இத்துறை சார்ந்த பங்குகளில் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு முதலீடு செய்யும் நபர்களில் பெரும்பாலானோர் பெங்களூருவில் இருந்து தான் முதலீடு செய்வதாக தகவல்கள் கிடைக்கப் பெறுகிறது.
பெங்களூரு இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் ஒன்று. மேலும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள இடமாக பெங்களூரு இருப்பதால் அதனை சுற்றியுள்ள பல பகுதிகள் படு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கொரோனா நேரத்தில் கடன் பிரச்சினை காரணமாகவும், பணபரிவர்த்தனை இல்லாமலும் மோசமான சூழ்நிலையில் சற்று பின் தங்கி இருந்தாலும், தற்போது சூழ்நிலை சற்று மாறி
மெல்ல மெல்ல மீண்டு நல்ல நிலையில் ரியல் எஸ்டேட் துறை இருக்கின்றது எனவே வருங்காலத்தில் இதன் மீதான முதலீடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்