Tamilnadu

பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை எங்கு சந்திப்பார்.. ஆனால் அது அயோத்தியாக இருக்காது என சூசகம்!

Modi and russian puthinai
Modi and russian puthinai

பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை எங்கு சந்திப்பார் என்று தெரியாது ஆனால் அது அயோத்தியாக இருக்காது என சூசகமாக தெரிவித்துள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


கிரிக்கெட்டில் LBW கேட்கும் பவுலரை போல் அமெரிக்காவினை நோக்கி துருக்கியும் பாகிஸ்தானும் இந்தியா மேல் பொருளாதடை விதிக்க கத்தி கொண்டிருக்கின்றன‌

இந்தியாவின் ஆயுத பெருக்கம் தங்களுக்கு அச்சமூட்டுவதாகவும் இந்தியா எஸ் 400 வைத்திருப்பது தங்களுக்கு ஆபத்து என்பதால் அவர்கள் மேல் பொருளாதார தடை விதிக்கவேண்டும் எனவும் அலறுகின்றது

துருக்கி இன்னும் ஒருபடி மேலே போய் இதே எஸ் 400 வாங்கியதால் எங்களுக்கு தடை ஆனால் அதே சாதனத்தை இந்தியா வாங்கினால் தடை இல்லையா? இது நீதியா? தர்மமா என கொதித்து கொண்டிருக்கின்றது

ஆனால் அமெரிக்க நடுவர் அவர் போக்கில் நிற்பதால் இருவரும் அப்செட் இந்நிலையில் டிசம்பர் 6ம் தேதி இந்தியா வருகின்றார் ரஷ்ய அதிபர் புட்டீன், அவர் இந்தியாவில் மோடியினை சந்திக்கின்றார்

இந்தியா மிக முக்கியமான ஒப்பந்தங்களை செய்யலாம் என எதிர்பார்க்கபடுகின்றது, இந்தியாவின் ராணுவ தேவைகளுக்கான தொழில்நுட்ப பரிமாற்றமாக இது அமையலாம்

இந்தியா மெல்ல மெல்ல ஆயுத இறக்குமதியினை குறைத்து நவீன விமானங்களையும் இதர சாதனங்களையும் உள்நாட்டிலே தயாரிக்க முடிவு செய்திருக்கின்றது இதற்கு புட்டீனின் வருகை பலம் சேர்க்கலாம்

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவினை தங்கள் கூட்டணியில் சேர்த்திருக்கும் பொழுது நிகழும் இந்த‌ ரஷ்ய அதிபரின் வருகையானது இந்தியா எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல அதே நேரம் தன் நலனுக்காக எந்த அணியிலும் சேர தயங்காது என்பதை சொல்கின்றது

பொதுவாக டிசம்பர் 6ம் தேதி இந்தியாவின் பதற்றமான நாள் என்பதால் தேசம் ஒரு பரபரப்பில் இருக்கும் இம்முறை இன்னும் பரபரப்பு கூடும்

ரஷ்ய அதிபர் புட்டீனை மோடி இந்தியாவில் எங்கு சந்திப்பார் என தெரியவில்லை, ஆனால் அது அயோத்தியாக மட்டும்  இருக்காது என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன் மொத்தத்தில் ரஷ்ய அதிபர் வருகையும் இந்தியாவில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.