உலகில் நிறைய இடங்களில் நல்ல கருத்துக்களுடைய செய்திகள் அனைவரின் மத்தியிலும் பரப்பப்பட்டாலும் கூட சில இடங்களில் அதற்கு எதிர்மறையான கருத்துக்களும் எழுந்து கொண்டு தான் உள்ளது. அதைத்தொடர்ந்து சில மூட நம்பிக்கைகளும் வளர்ந்து கொண்டே தான் உள்ளது. சில மூடநம்பிக்கைகள் அனைவராலும் நம்ப பட்டாலும் கூட சில மக்கள் அது போன்ற மூடநம்பிக்கைகளை முழுவதுமாக எதிர்த்து தான் வருகின்றன. சிலர் வெளியில் செல்லும்போது பூனை குறுக்கே வந்தால் செல்லும் காரியம் தவறாகும் என்றும், உள்ளங்கைகள் அரித்தால் பணம் நிறைய கிடைக்கும் என்றும் சின்ன சின்ன விஷயங்களில் அதிகமாக மூட நம்பிக்கைகள் கொண்டுள்ளனர். இது போன்ற மூடநம்பிக்கைகளை சிலர் அவர்களுக்கு தவறானது என்று புரிய வைத்தாலும் கூட அவர்கள் இதெல்லாம் உண்மைதான் என்று முழுமையாக நம்புகின்றனர். என்னதான் தற்போது டெக்னாலஜி அதிக அளவில் வளர்ந்து கொண்டே வந்தாலும் கூட இது போன்ற மூடநம்பிக்கைகளும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு தான் உள்ளது.
பழங்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக கூறப்பட்ட விஷயங்களை கூட தற்போது ஏன் என்று கூட தெரியாமல் அதை அப்படியே பின்பற்றி வருபவர்களும் உள்ளனர். மூடநம்பிக்கைகள் என்று சொல்லும் சில விஷயங்கள் மனிதர்களுக்கு சில இடங்களில் நல்லவையாக கூடவும் இருந்துள்ளது. ஆனால் அவற்றை எப்படி அவர்கள் கையாளுகிறார்கள் என்பதுதான் இதில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சில மூடநம்பிக்கைகள் சரியானதா தவறானதா என்று தெரியாமல் கூட பின்பற்றுவதால் சில சமயங்களில் அவர்களின் உயிருக்கே பாதிப்பாகி விடுகிறது. இன்றைய காலத்தில் அதிக அளவில் டெக்னாலஜிகளின் வளர்ச்சி உள்ளது. எனவே ஏதேனும் ஒரு விஷயத்தை கேள்வி பட்டால் அது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்த்து அதை பற்றிய செய்திகளை அறிந்துகொண்டு அதன்பின் அவற்றை நம்புவதே சரியாக இருக்கும். அதற்கு மாறாக அவற்றை அப்படியே நம்பிக் கொண்டு வாழ்ந்து வந்தால் கடைசியில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாகும் நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இது போன்ற ஒரு மூட நம்பிக்கையை நம்பி தற்போது மூன்று உயிர்கள் இறந்திருப்பதை சமீபத்தில் வெளியான செய்தியின் மூலம் அறிய முடிகிறது. அதில் மறைந்திருக்கும் மூடநம்பிக்கை என்னவென்றால்????கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் தம்பதி இருவரும், அவரின் தோழி ஒருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடநகரில் சற்று தொலைவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்!! இதனை கண்டறிந்து அங்கு நிறைந்த போலீசார் அவர்களை பார்த்துவிட்டு இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்த மூவரும் ஏன் இப்படி தற்கொலை செய்தார்கள் என்று விசாரிக்கும் பொழுது தான் திடீகிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால் இவர்கள் மூவரும் ஏலியன் மற்றும் வேற்றுக்கிரக நம்பிக்கை அதிகமாக கொண்டு மனிதர்கள் முதல் உயிரினங்கள் அனைத்தும் வேற்று கிரகங்களுக்கு மாற்றப்படும் என்று நம்பியுள்ளனர். அதோடு இறந்து போனவரின் லேப்டாப்பை கைப்பற்றி போலீசார் ஆராய்ந்து பார்க்கையில் பால்வழி மண்டலத்தில் கூட சில உயிர்கள் வாழ்கின்றன என்றும் அதற்கு ஒரு உருவமும் கொடுத்துள்ளனர் என்றும் அறியப்படுகிறது. மேலும் அந்த லேப்டாப்பில் மித்தேன் என்ற அறியாத நபருடன் உரையாடலும் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை அறியப்படாத சர்வரில் இருந்து இவர்களுக்கு மெயில் வந்துள்ளது. இதன் பின்னணியில் வேறேதும் நபர்கள் இருப்பார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் ஏன் திருவனந்தபுரத்தில் இருந்து இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டனர் என்றும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திருவனந்தபுரத்தின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.