24 special

முதலமைச்சர் மௌனம் காக்க காரணம் ..? நடிகை குஷ்பூ சாடல்..!

Kushboo, Stalin
Kushboo, Stalin

தமிழகம் முதல் இந்தியா வரை பரபரப்பாக பேசப்படும் சம்பவம் திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் இந்த விஷயம் பூதாகரமான நிலையில் தமிழக முதல்வர், மாநிலத்தை போதைப்பொருளின் மையமாக மாற்றியுள்ளார் என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ தெரிவித்துள்ளார். 


கோடி கணக்கில் போதை பொருள் மூலம் டத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு. சென்னையில் உள்ள அவரது வீட்டை சீல் வைத்தனர். டெல்லி காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது கலப்பு பொருட்கள் மூலம் போதை பொருள் கடத்தியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்தனர். இதன் பின்னணியில் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் இருந்தது தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் ஜாபர் சாதிக் வீட்டில் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் ஆஜராகுவதற்கு சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், ஜாபர் ஆஜராகாததால் அவரது வீட்டை மத்திய போதை தடுப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சூழ்நிலையில் என் இது தெடர்பாக யாரும் வாயை திறக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, சமூகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் முதலாவதாக குரல் கொடுப்பது சினிமா துறையை சேர்ந்தவர்கள். அதிலும் சமூக போராளியான சத்திய ராஜ், சூர்யா, விஜய் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ரஞ்சித், சமுத்திரக்கனி ஆகியோர் முதல் ஆளாக குரல் கொடுப்பார்கள் ஆனால் இவர்கள் யாரும் தற்போது கருத்து தெரிவிக்காமல் இருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், தமிழகமுதல்வர் ஸ்டாலின் அவருடன் கூட்டணி கட்சிகளை வைத்திருக்கும் திருமாவளவன் உள்ளிட்ட கட்சியினர் எதற்காக கண்டனம் தெரிவிக்காமல் இருக்கின்றனர். மேலும், திமுகவில் உள்ள ஒரு நபர் இத்தகையை செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனால், திமுக தரப்பில் இருந்து யாரும் ஏதும் பேசாமலே இருக்கின்றனர். சினிமா துறை தற்போது திமுக கையில் இருப்பதால் பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதால் மௌனம் காத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு மாறாக இது போதை பொருள் சம்பவம்  என்பதால் நமக்கு ஏதாவது பிரச்சனை சூழ்ந்து விடும் என மௌனம் காக்கிறார்களாம். இல்லை ஜாபர் சாதிக் படத்திற்கு எதாவது தொகை கொடுத்து உதவினரா என கேள்வி இணையத்தில் எழுந்து வருகிறது.

ஜாபர் சாதிக்கின் தம்பி சைமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்தார் அதனால் தான் திருமாவளவன் ஏதும் பேசாமல் இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து எதிர்கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். பாஜக நிர்வாகி குஷ்வும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தமிழக முதல்வர், மாநிலத்தை போதைப்பொருளின் மையமாக மாற்றியுள்ளார். போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது, எல்லாம் நன்றாக இருக்கிறது என ஆளும் அரசு மிகவும் வசதியாக பாசாங்கு செய்கிறது. சாதிக்பாஷா திமுக உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பது வெளிப்படையான ரகசியம். மு.க ஸ்டாலின் மவுனமாக இருப்பது அவமானம் என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.