ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என்ற பாடலை ஒழிக்கவிட்டு நகர்புற தேர்தலில் வீதி வீதியாக வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி இருவர், பெண் போலீஸ் முன்னிலையில் வேட்டியை கழட்டி ரோட்டில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
மதுரை, பரவை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் கடந்த 4 தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது அதிமுகவினர் 2 பேர் வாக்களித்த நிலையில், திடீரென திமுகவினர் ரகளையில் ஈடுபட்டு வாக்குபெட்டியை கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அன்புச்செல்வன், துரை சரவணன் ஆகிய இருவரும் அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர் பரவை பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுகவினரை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி முருகு, திமுகவினரிடம் தேர்தல் விதிமுறைகளை கூறியும், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
மொத்தம் இருந்த 15 இடங்களில் அதிமுக 8 இடங்களிலும் திமுக 6 இடங்களிலும் சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றனர். பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அதிமுகவிடம் இருந்தும் திமுகவினர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர் அதற்கு அவர்கள் தெரிவித்த காரணம்தான் ஹைலைட்.
ஆளும் கட்சியான திமுக 6 இடங்களில் வெற்றி பெற்று இருக்கோம் எங்களுக்கு தான் சேர்மன் வேணும் இல்லை என்றால் எந்த நல திட்டமும் கிடைக்காது என தேர்தல் அதிகாரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செந்தில் ஒரு படத்தில் நீங்க SSLC பெயில் நா 7வதி PAAS னே என்ற கதையாக இருந்தது ஆர்ப்பாட்டம்.
இதில் பொறுத்து பார்த்த திமுகவினர் நாங்க ஆளும் கட்சியாக இருந்தும் தேர்தலை நிறுத்தவில்லை என்றால் எங்களுக்கு என்ன மரியாதை எனவும் இந்த கரைவேட்டிக்கு என்னயா மரியாதை வேண்டி கிடக்கு என வேட்டியை கழட்டி ரோட்டில் போட்டு ஆவேசம் அடைந்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது அண்ணா சொல்வார் பதவி என்பது துண்டு போன்றது ஆனால் கட்சி என்பது வேட்டி போன்றது துண்டு போனால் பரவாயில்லை ஆனால் வேட்டி போனால் மானமே போனது போன்றது என மேடைக்கு மேடை பஞ்ச் பேசும் திமுகவினர் இப்போது வேட்டியை கழட்டி வீசி இருப்பது கடும் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.