Tamilnadu

கையெடுத்து" கும்பிட்ட பெண் எஸ்பி, ஆளுநர் வேலையை தொடங்கினார்..! இறுதி அஸ்திரம்!

DMK and ADMK
DMK and ADMK

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அரங்கேறிய சம்பவங்கள் மாநில போலீசாரை பல இடங்களில் பதம் பார்த்துள்ளது, நேரடியாக சேர்மன் பதவிக்கு தேர்தல் இருந்திருந்தால் இன்று போலீசார் சிக்கலை சந்திக்கும் சூழல் உருவாகி இருக்காது. அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவங்கள் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்னவாசல் பேரூராட்சியில் தலைவர் தேர்தலில் அரங்கேறிய சம்பவம் இன்று மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கையில் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது,

அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுகவினர் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பேரூராட்சி அலுவலகத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக அப்பகுதியில் மோதலில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.இதையடுத்து அதிமுக வேட்பாளர் சாலை பொன்னம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில் திமுக புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் செல்ல பாண்டியன் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

நாளைக்கு எனக்கு சி.எம் அப்பாயிண்ட்மென்ட் இருக்கு அப்போது அங்கு வச்சுகிறேன் என பெண் எஸ் பி முன்னிலையில் காவல்துறை அதிகாரியை மிரட்டினார் செல்ல பாண்டியன், இந்த நிலையில் பெண் எஸ்பி செல்லபாண்டியன் முன்பு கை எடுத்து கும்பிட்டாதாக தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் பல மாவட்டங்களில் காவல்துறையினரை ஆளும் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது, தற்போது ஆளும் கட்சி மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டி பெண் எஸ்.பி முன்னிலையில் நீங்க வேண்டுமானால் துப்பாக்கி சூடு நடத்துங்கள் என பேசியது ஆளுநர் வரை சென்றுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக நாளுக்கு நாள் சென்றுகொண்டு இருக்கிறது என ஆளுநரிடம் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே புகார் அளித்த நிலையில் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர் போலீசாரை மிரட்டியதும், நானே பணம் கொடுத்தேன் என வெளிப்படையாக பேசிய தகவல் ஆளுநரிடம் சென்றுள்ளது.

இது குறித்து ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு மாதம் ஒருமுறை அனுப்பும் நிலவரத்தில் குறிப்பிடுவார் எனவும் விரைவில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறலாம் எனவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் நகர்புற தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக வந்தாலும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் அரங்கேறிய மோதல் சம்பவங்கள் ஆளும் அரசிற்கு கடும் பின்னடைவை கொடுத்துள்ளது.

ஆளுநர் இன்னும் இரண்டு வாரத்தில் டிஜிபியை அழைத்து விளக்கம் கேட்க வாய்ப்பு இருப்பதாகவும் அதன் அடிப்படையில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறலாம் எனவும் கூறப்படுகிறது.

More Watch Videos