24 special

கேப்டனின் உடல்நிலை இவ்வளவு மோசமானதற்கு காரணம் வெளிவந்துள்ளது! பொதுவெளியில் போட்டு உடைத்த பிரேமலதா...

pramaladha vijayakanth
pramaladha vijayakanth

வள்ளலாகவும், ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் நாட்டிற்காக நாட்டை காப்பாற்ற வந்த ராணுவ வீரராகவும் நாட்டாமையாகவும் ஊர் தலைவராகவும் அதே ஊரில் நாடோடியாகவும் அண்ணனாகவும் தந்தையாகவும் மகனாகவும் நடித்து எண்பதுகளில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் படத்தையும் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் பல உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து உள்ளவர். உணவளிப்பதில் கர்ணனையும் இவர் மிஞ்சி உள்ளார் என மிகவும் பாராட்டப்பட்டவர்.அடுத்தபடியாக அரசியலும் நுழைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே நோக்கமாகக் கொண்டு அரசியலில் நுழைந்த நடிகர் விஜயகாந்த் தேமுதிகவை தமிழகத்தின் முக்கிய கட்சியாக்கினார்.. அரசியலில் நுழைந்து சிறிய காலத்திலேயே மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கில் எதிர்க்கட்சி என்ற ஒரு அந்தஸ்தை பெற்றார்.


அப்படியே அவரது அரசியலும் உடல் நிலையும் சீராக இருந்திருந்தால் தமிழகத்தில் தற்பொழுது தேமுதிக பிரதான கட்சியாக இருந்திருக்கும் என்று கூறப்படுபவர்கள் இன்றளவும் அதிகம் பேர் உள்ளனர்.ஆனால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் விஜயகாந்த்தால் கலந்து கொள்ள முடியாமல் போனது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் தனது திருமண நாள் பிறந்தநாள் போன்ற நாட்களில் தொண்டர்களை சந்தித்து மகிழ்வார். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தினால் அந்த நாட்களிலும் தொண்டர்களை பார்க்க முடியாதமல் உடல்நிலை குறைவால் அவதிபட்டார். 

இதனால் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தை எப்பொழுது பார்ப்போம் அவர்களது உடல்நிலை எப்பொழுது சரியாகும் என்ற பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கடந்த 18ஆம் தேதி தேமுதிக தலைவர் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்தின் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உங்க அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இதனால் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக செய்திகள் வெளியானது இருப்பினும் கடந்த  வாரத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் கிடைத்து உடல்நிலை முழுவதும் குணமடைந்து கேப்டன் வீடு திரும்பினார், இதனை தொடர்ந்து சென்னை திருவேற்காட்டில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்த அனைவரும் மிகவும் பரிதாபத்தோடு விஜயகாந்தை ஏன் இப்படி அலைக்கழிக்கிறீர்கள்? அவரை ஓய்வு எடுக்க விடுங்கள் என்று பல விமர்சன கருத்துக்களை முன்வைத்தனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார் அவரது தலைமையில் தான் 2024 ஆம் ஆண்டு தேர்தலை தேமுதிக எதிர் கொள்ளும் என்று கூறப்படுகிறது.  

இந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை இவ்வளவு மோசமானதற்கான காரணங்களை தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது 2011 கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அதற்குப் பிறகு தேமுதிக எதிர்க்கட்சி என்ற ஒரு அந்தஸ்தை பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் இதற்கு அடுத்த மூன்று மாதங்களில் கேப்டன் யாரெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி வழங்கினாரோ அவர்கள் அனைவரும் கேப்டனின் முதுகில் குத்தினர்! அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு விஷயமும் கேப்டனுக்கு மிகப்பெரிய சறுக்களை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார். இப்படி சொந்தக் கட்சியின் எம்எல்ஏக்களே துரோகம் செய்து வேறு கட்சிக்கு தாவியதை நினைத்து நினைத்து தான் கேப்டனின் உடல்நிலை இவ்வளவு மோசமானது என்று பிரேமலதா கூறியது தற்பொழுது சர்ச்சையாக வெடித்துள்ளது.