பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி அதில் இருந்தே வெற்றி படங்களை கொடுத்த கார்த்தி ஆயிரத்தில் ஒருவன், பையா, என வரிசையாக கொடுத்து வந்தார் பாடல் பாடுவதற்கும் இயக்குனராகவும் ஆசைப்பட்ட கார்த்தி தனது தந்தை சிவகுமார் சொன்னதால் நடிப்பில் ஆர்வம் கொண்டார். 25 படங்களை நடித்து முடித்துவிட்டு தற்போது மிக பெரிய முடிவை எடுத்துவிட்டாரம் அதாவது கார்த்தியின் அண்ணன் சூர்யா எடுத்த முடிவை தானும் எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சமூக போராளியாக இருக்கும் சிவகுமார் குடும்பம் ஆட்சி மாற்றத்திற்கேற்ப படங்களில் நடித்து வருவதும் அந்த ஆட்சியில் எதாவது பிரச்னை ஏற்பட்டால் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதும் என்று முக்கிய பணியாக மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மவுனம் காத்து வரும் சிவகுமார் ககுடும்பத்தாருக்கு எந் ஒரு படமும் அமையாமல் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக சூர்யா திரையில் வந்ததே பல வருடம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம் அது போலவே தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வந்த கார்த்தி கடைசியாக தனது 25வது படம் மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது ஜப்பான். அதாவது நடிகர்கள் தனது 25 வது படம் மூலம் சிறப்பு கவனம் செலுத்துவதை கார்த்திக் கோட்டை விட்டார் என்றே சொல்லலாம்.
இதனால் புது கதைகள் தனக்கு செட்டாகாது என தோன்றிவிட்டது போல. அவரின் அடுத்தக்கட்ட படங்கள் எல்லாம் இரண்டாம் பாக கதைகள் தானாம். முதலில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. நலன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் 26வது படம் மற்றும் ப்ரேம் குமாருடன் அவர் நடிக்க இருக்கும் ப்ராஜெக்ட் முடிந்தவுடன் இந்த கதையில் நடிக்க இருக்கிறாராம். அதாவது சூர்யா இதே போல் தான் தோல்வி படங்களை கொடுத்ததால் ஹரி கூட்டணியில் இணைந்து சிங்கம் சீரியஸ் கையில் எடுத்தார். அதன் பிறகு தோல்வி படங்கள் அமைந்ததால் தற்போது மிக பெரிய வெற்றியை நோக்கி சிவாவுடன் கை கோர்த்துள்ளார் சூர்யா.
இப்படி தொடர் தோல்விக்கு காரணம் குறித்து சினிமா வட்டாரங்களே பல கருத்துக்களை தெரிவிக்கின்றனர். சிவகுமார் குடும்பம் மொத்தமும் அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு மாதிரி முகத்தை மக்களிடம் காட்டுகிறார்கள், ஆட்சி மாறியதும் மக்களிடம் வேறு முகத்தை காட்டுகிறார்கள். இது தான் அவர்களின் செயல்பாடுகள் என விமர்சனத்தை பெற்று வருகின்றனர். மேலும், கார்த்திக் சினிமா வாழ்கை சிறப்பாக சென்றது அவரும் எப்போது சமூக விரோதியாக மாறி குரல் கொடுத்தாரோ அப்போது அவரது சினிமா வழக்கியில் சறுக்க ஆரம்பித்து விட்டார். இப்போது மொத்த குடும்பமும் சினிமா துறையில் இருந்து கொண்டு னால படங்களுக்கு வாய்ப்பு தேட தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.