24 special

அறிவாலயத்திற்கு அதிர்ச்சி அளித்த ரிப்போர்ட்..... மொத்தமாக தட்டி தூக்க போகும் காவிகள்....

arivalayam, annamalai
arivalayam, annamalai

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான புதிய வழிகாட்டுதல்கள் பலவற்றை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதோடு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளையும் கூட்டணி குறித்த ஆலோசனைகளிலும் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளாக பார்க்கப்படுகின்ற திமுக அதிமுக பாஜக மூன்று கட்சிகளும் இதுவரை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது இருப்பினும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பாஜகவின் தேர்தல் கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக வெளியிட்ட அறிவிப்பு தமிழக அரசியலை இன்னும் அனல் பறக்க வைத்துள்ளது. ஒவ்வொரு கட்சியின் தங்கள் கூட்டணிகளை தக்க வைக்கவும் புதிய கட்சிகளை தனது கூட்டணிக்குள் இணைக்கவும் பல வகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் திமுக அரசு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக முழுவதும் சில குறிப்பிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 50 கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வகையிலான கருத்துக்கணிப்பில் உளவுத்துறை அதிகாரிகளை ஈடுபட வைத்துள்ளது.


அந்தக் கேள்விகளில் தமிழகத்தின் பாஜக நிலை எப்படி இருக்கிறது அண்ணாமலை குறித்தும் கேள்விகள் இடம் பெற்றிருப்பது செய்திகளில் வெளியானது. இதனை அடுத்து திமுக இப்படி திடீரென்று உளவுத்துறையை பயன்படுத்தி தங்களுக்கான பதிலை தெரிந்து கொள்ள கருத்துக்கணிப்பு ஈடுபட வைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகவும் மாறி உள்ளது. இந்த நிலையில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு இந்த கூட்டணிக்கு எவ்வளவு சதவிகிதம் ஓட்டுகள் கிடைக்கும் என்பது பற்றி மாட்ரிஸ் - டைம்ஸ் நவ் நிறுவனங்கள் இணைந்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 366 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாகவும் இண்டியா கூட்டணிக்கு வெறும் 104 இடங்களும் பிற கட்சிகளுக்கு 73 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 41.8 சதவிகித ஓட்டுகளும், 28.6 சதவிகித ஓட்டுகள் INDI கூட்டணிக்கும், 29.6 சதவிகித ஓட்டுகள் பிற கட்சிகளும் பெரும் என ஓட்டு சதவீதங்களையும் வெளியிட்டுள்ளது.

மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உத்திரபிரதேசத்தில் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் 77 இடங்களை பாஜக கைப்பற்றி உத்தர பிரதேசம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அதற்குப் பிறகு பீகாரில் 35 இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்திலும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு இலக்க சதவிகித ஓட்டுக்களை பாஜக பெரும் என்பதையும் டைம்ஸ் நவ் நாளிதழ் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கு மிக முக்கியமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் மக்களை ஈர்த்ததோடு மக்களின் பெருவாரியான ஆதரவையும் பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாகவே பாஜகவின் ஓட்டு வாங்கி தற்போது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்புகளும் தற்பொழுது வெளியாகி பாஜக தலைமையிலான கூட்டணி 335 இடங்களை பிடித்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடிக்கே வெற்றி கிட்டும் என பாஜகவிற்கு சாதகமான முடிவுகள் பெறப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்ததோடு விறுவிறுப்பாக தேர்தலில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தையும் இழக்க வைத்துள்ளது.