Cinema

விஜய்க்கு போட்டியாக வரும் புரட்சி தளபதி... ரஜினியையும் விட்டு வைக்காமல் பங்கம் செய்துள்ளார்..?

Vishal, Rajinikanth
Vishal, Rajinikanth

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின் அரசியல் தலைவர்கள் என பலரிடமும் பேசு பொருளாக தொடங்கியது. விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு வெளியிட வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்க்கு போட்டியாக நடிகர் புரட்சி தளபதி விஷாலும் கட்சி தொடங்குவதாக சில தகவல் வந்தன. இதனால், விஷால் கூடிய விரைவில் கட்சி தொடங்கலாம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது. தற்போது விஷால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் விதமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால், எப்போதும் சுறுசுறுப்பாகவும் முகத்தை கோபத்துடன் நடித்து வரும் இவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னே திருமணம் என்ற போக்கில் சபதம் எடுத்து வருகிறார். இந்நிலையில், தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதாக சில தகவல் வர விஷாலும் அறிக்கை மூலமா நேரம் வரும்போது அரசியலில் இறங்குவேன். மக்களுக்கு சேவை செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் சட்டமன்றதேர்தலில் போட்டியிட வைய்ப்பு இருப்பதாக அவரது ரசிகர்களே கருத்துக்களை தெரிவித்தனர். 

இதற்கிடையில் விஷாலின் அப்பா, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது முதலில் திருமணம் செய்து கொள் பிறகு அரசியல் குறித்து யோசிக்கலாம் என்றும் உன்னைப்போல் உள்ள விஜய், அஜித் சூர்யா நல்லா சம்பாதிக்கிறாங்க என அட்வைஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷால், நான் அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டு அதன் பின்னர் வரமேட்டேன்னு சொல்லி பின்வாங்குபவன் அல்ல. அரசியலுக்கு வரேன்னு சொல்லிவிட்டால் கட்டாயம் வருவேன் என பேசியிருக்கிறார். ரஜினிகாந்த் முன்னாடி அரசியலுக்கு வருவதாக தனது ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் வைத்திருந்தார். சுமார் இரண்டு வருடமாக கூறி வந்த ரஜினிகாந்த் கடையில் சினிமாவே போதும் அரசியல் வேண்டாம் என கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

இதனால், நடிகர் ரஜினிகாந்தை தான் விஷால் இப்படி பேசி மறைமுகமாக தாக்கி உள்ளார் என்றும் லால் சலாம் படத்தின் ரிலீஸ் நாளில் விஷால் எதை மனதில் வைத்து இப்படி பேசினார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் விஷாலை வெளுத்து வாங்கி வருகின்றனர். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஹசல் நடத்தும் நகைச்சுவை எல்லாம் தெரியும் உணவுக்கு மரியாதை கொடுப்பது போலும் விஜயகாந்த் மறைவின் போது விஷால் வெளிநாடுகளில் கூத்து அடித்தது எல்லாம் தெரியும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, விஜய் அரசியல் கட்சி அறிவித்த பின் விஷாலும் போட்டியாக தனது மன்றத்தை அரசியல் கட்சியாக மற்ற போகிறார் என்பதால் விஜய் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தாலும் சிலர் சரமாரியாக விஷாலை கொட்டி தீர்த்து வந்தனர். தற்போது ரஜினியை மறைமுகமாக தாக்கியதாள் இரண்டு ரசிகர்களுமே ஒன்று திரண்டு விஷாலை பானகம் செய்து வருகின்றனர். இதற்கு விஷால் ரசிகர்கள் இன்னும் கட்சியே தொடங்கவில்லை அதற்குள் போட்டியா எண்டு சமாதனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் விமர்சகர்கள் கோடம்பாக்கத்தில் தோல்வி அடைந்தாள் அரசியல் வந்துவிடலாம் என்ற முடிவை எடுத்து வருவதாக கூறுகின்றனர்.