புதுதில்லி : காங்கிரசில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்துவரும்வேளையில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா செய்வது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குஜராத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு கடும்நெருக்கடியை கொடுப்பார் என கூறி ஹர்திக் படேல் எனும் சாதிய தலைவரை காங்கிரஸ் இணைத்துக்கொண்டது. ஆனால் அதுவே தற்போது காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஹர்திக் படேல் கடந்த சிலமாதங்களாக பிஜேபி டெல்லி தலைமையுடன் மிக நெருக்கமாக இருந்துவந்துள்ளார்.
இதனால் இன்னும் சிலநாட்களில் அவர் பிஜேபியில் இணையலாம் என கூறப்படுகிறது. குஜராத் மாநிலம் படிதார் சமூக தலைவராக இருப்பவர் இந்த ஹர்திக் படேல். இவரின் சாதிஓட்டுக்களை குறிவைத்து 2019ல் காங்கிரசில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தனது சுற்றுப்பயணத்தில் ஹர்திக்கை ராகுல் சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நேற்று அவர் காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த ஹர்திக் "நான் கட்சியின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்தேன். அவர்களிடம் குஜராத் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பினேன். அவர்கள் அதைகேட்பதற்கு பதிலாக மொபைலை நோண்டிக்கொண்டிருந்தனர்.
குஜராத்தில் நடக்கும் பேரணிகளில் கலந்துகொள்ளும் உயர்மட்ட தலைவர்கள் மக்களுடன் கலந்துரையாடுவதை தவிர்த்துவிட்டு தங்களுக்கான சிக்கன் சான்டவிச்சுக்களை பெறுவதிலேயே கண்ணும்கருத்துமாக இருக்கின்றனர். (குஜராத் பயணத்தின்போது ராகுலுக்கு சிக்கன் சாண்ட்விச் கொடுக்கப்பட்டதை குறிப்பிட்டார்)
இக்கட்டான நேரங்களில் இந்தியாவில் தேவைப்படுகையில் எங்கள் தலைவர் வெளிநாட்டில் இருந்தார்.குஜராத்தை தலைமை கடுமையாக வெறுக்கிறது. மாநிலத்தின் மீது எந்தவொரு அக்கறையும் இல்லை. மக்களிடம் எடுத்து முன்வைக்க எந்த ஒருவழிகாட்டுதலும் இல்லை என்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது" என செய்தியாளர்களிடம் ஹர்திக் தெரிவித்துள்ளார்.