Tamilnadu

தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு "வீடியோவை" ரிலீஸ் செய்துவிட்டார்களே கதறும் திமுகவினர்!

Annamalai
Annamalai

பாஜக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு வீடீயோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் விழுப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறது தமிழக பாஜக குறிப்பாக ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக செய்யாத செயல்களை இந்த தேர்தலில் பாஜக செய்து வருகிறது.


அதில் ஒன்றுதான் விடியல் எங்கே என மாணவர்கள் கேட்கும் கேள்வி நீட் தேர்வு ரத்து செய்வோம் என சொல்லி எங்களை குளறுபடி செய்து விட்டு இப்போதும் அதே கதையை சொல்கிறீர்கள் எங்களுக்கு விடியல் கிடைக்கலை என மாணவர்கள் பேசுவது போன்றும் வாக்கு கேட்டு வந்த திமுகவினர் அதனை பார்த்து முழிப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு இணையாக பாஜக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறது இதுவரை 12 மேற்பட்ட கவுன்சிலர் இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏகமனதாக வெற்றி பெற்று இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர். மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வாக்கு வங்கி அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில்தான் பாஜக வெளியிட்ட விளம்பர வீடியோ திமுகவினர் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது மொத்தத்தில் பாஜகவினர் இந்த முறை தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வலம்வர வேண்டும் என்பதில் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, கோவை, கரூர், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் பாஜக அதிக அளவு வெற்றிகளை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. பாஜக சார்பில் வெளியிட்ட வீடியோ லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.