Tamilnadu

#BREAKING ஹிஜாப் டூல்கிட் வெளியானது ஆதாரம் சிக்கிய மாணவிகள்!!

Hijab students
Hijab students

ஹிஜாப் விவாகரத்தில் அனைத்தும் திட்டமிட்ட நாடகம் என்ற தகவலை பகிர்ந்துள்ளார் பாஜகவை சேர்ந்த SG சூர்யா இது குறித்து அவர் தெரிவித்த தகவல் பின்வருமாறு :-


HijabRow விஷமிகளால் திட்டமிடப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் சிக்கியுள்ளன. ஊடக உதவியுடன் இது எப்படி அரங்கேறியது என இப்பதிவு விவரிக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாத #PFI அமைப்பின் மாணவர் பிரிவு #CampusFrontOfIndia உடுப்பியில் செப்டம்பர் 2021 முதல் உறுப்பினர் சேர்க்கையை துவக்குகிறது.

தற்போது பர்தாவை வகுப்பறைக்குள் அணிந்தே தீருவேன் என கலாட்டா செய்து இப்பிரச்சனையை இந்தியா முழுக்க பூதாகரம் ஆக்கிய 6 பெண்களில் 4 பேர் புதிய ட்விட்டர் கணக்குகளை #CFI உறுப்பினர் ஆனவுடன் அக்டோபர் 2021-ல் துவங்குகின்றனர். CFI அமைப்பின் பிரச்சாரங்களை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.

BBC பேட்டியில் பர்தா பிரச்சனையை செய்த ஒரு பெண் தான் CFI உறுப்பினர் இல்லை, இப்பிரச்சனை ஆரம்பித்த பிறகே தொடர்பு கொண்டன் என கூறியுள்ளார். ஆனால், அவர் ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து பதிவுகளும் மாதக்கணக்காக CFI பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து வருகிறது.


புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக Campus Front Of India  நவம்பர் 1 2021 அன்று பிரச்சாரத்தை முன்னெடுக்க, அதற்கு பர்தா பிரச்சனையை துவக்கிய பெண்களின் ஆதரவு பதிவுகள் இவை.இப்பதிவுகள் மூலம் இவர்கள் CFI அமைப்பின் கட்டுப்பாட்டில் அவர்கள் சொல்வது போல் இயங்கி வந்தனர் என்பது ஊர்ஜிதமாகிறது.

பர்தா போராளிகள் Campus Front Of India பிரச்சாரத்தை முன்னெடுத்ததன் மூலம் இவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான PFI-ன் மாணவர் அமைப்பான CFI-ல் தீவிர உறுப்பினர்கள் என்பது உறுதியாகிறது. இதே PFI அமைப்பை தான் தடை செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்தார். 

அடுத்து CFI அமைப்பின் பாபர் மசூதி குறித்த ட்விட்டர் பிரச்சாரம் நவம்பர் 8 2021 அன்று முன்னெடுக்கப்படுகிறது. அன்றும் இந்த பர்தா போராளிகள் உணர்ச்சிகர பதிவுகளை பதிவிட்டு ஆதரவு தருகின்றனர். CFI அமைப்பின் தேசிய தலைவர் சஜித் அவர்களின் பதிவுகளையும் Retweet செய்து பதிவிட்டுள்ளனர்.

அடுத்த CFI பிரச்சாரம் நவம்பர் 11 தேசிய கல்வி தினத்தன்று. அன்றைய பிரச்சாரத்திலும் துடிப்புடன் தங்கள் கருத்துக்களையும், அவர்களுக்கு CFI அமைப்பு மூலம் அனுப்பபட்ட ட்வீட்களையும் பதிவிடுகின்றனர். இந்த பதிவுகள் பர்தா போராளிகள் CFI அமைப்புடன் இணைந்து பணியாற்றியதை நிரூபணம் செய்கிறது.

அடுத்த CFI பிரச்சாரம் நவம்பர் 19 2021. கர்நாடகாவை பாஸிஸ்டுகளிடம் இருந்து காப்பாற்ற இந்த பிரச்சாரமாம். பர்தா போராளிகள் தங்களுக்கு அனுப்பப்பட்ட #ToolKit பதிவுகளை அப்படியே Copy Paste பதிவு செய்துள்ளனர் என்பதற்கான ஆதாரம் இவை. இவை இப்பெண்களின் PFI அமைப்பு தொடர்பை உறுதி செய்கிறது.

அடுத்து நவம்பர் 21, 2021 அன்று மசூதிகளின் ஒலிப்பெருக்கியில் பாங்கு ஒலிக்கப்படுவது குறித்தும் அது தங்கள் உரிமை என்று CFI அமைப்பால் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. அது குறித்தும் தங்களுக்கு Tool Kit மூலம் அனுப்பப்பட்டா காட்டமான பதிவுகளை பர்தா போராளி பெண்கள் பதிவிடுகின்றனர். 

ஆக பர்தா போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் பெண்கள் இஸ்லாமிய அடிப்படைவாத PFI அமைப்பின் மாணவர் பிரிவான CFI தீவிர உறுப்பினர்கள். இப்போராட்டம் எதேர்ச்சையாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மேற்கொண்டு நீதிமன்றத்தில் என்ன நடக்கிறதென பார்க்க வேண்டும். 

இந்த விவகாரம் குறித்து பல ஆதார புகைப்படங்கள் இந்த ட்விட்டர் இழையில் இணைக்கப்பட்டுள்ளது. தவறாமல் பார்த்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை cross-check செய்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.