24 special

முதல்வருக்கு இரண்டாவது திருமணம்..! பெண் யார் தெரியுமா..?


பஞ்சாப் : சண்டிகரில் உள்ள தனது வீட்டில் வித்து நெருக்கமானவர்கள் முன்னிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். இந்த திருமணத்தில் டெல்லி முதல்வரும் அன்னாஹசாரேவிடம் இருந்து கட்சியை தொடங்கி சீமான் போல வளர்ந்தவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.


மேலும் பகவந்த் மான்வயதில் பாதிதான் இருக்கும் மணப்பெண்ணுக்கு என கிசுகிசுக்கப்படுகிறது. பகவந்த் மான்முதல்வராவதற்கு முன்னர் சங்ரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவருக்கு இந்திரஜித் கவுர் என்பவருடன் திருமணமாகி 14 வயது மகள் மற்றும் 10 வயது மகன் என இரு வாரிசுகள் உள்ளனர். 

பல தனிப்பட்ட காரணங்களால் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தனர். பகவந்த் மான் மூத்த மனைவி இந்தர்ஜித் தனது குழந்தைகளுடன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இருவரது பிரிவிற்கு காரணமாக அவரது பதவியே காரணம் காட்டப்படுகிறது. சங்ரூர் எம்பியாக இருந்ததால் அமெரிக்க விசா கிடைக்கவில்லையென்றும்,

அவரது மனைவி இந்தர்ஜித் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரமுடியவில்லை என்றும் அதனாலேயே விவாகரத்து பெற்றதாகவும் ஒரு சாதாரண காரணம் சொல்லப்படுகிறது. மேலும் தற்போது பகவந்த் மான்திருமணம் செய்யப்போகும் பெண் ஒரு மருத்துவர் எனவும் அவரது பெயர் குர்ப்ரீத் கவுர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து ஆம் ஆத்மீ செய்தித்தொடர்பாளர் மல்வீந்தர் கூறுகையில் "பகவந் மான் சாப்பின் திருமணம் சண்டிகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. அதில் நிறுவனரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வார். மிக சிலருக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது" என அவர் தெரிவித்தார். மணப்பெண்ணின் வயதுவித்தியாசத்தை பற்றிய கேள்விகளுக்கு மல்வீந்தர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.