24 special

இருந்தாலும் அண்ணாமலைக்கு இவ்வளவு நக்கல் கூடாது... கதறும் காங்கிரஸ்!

Annamalai
Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து இருப்பதுடன் அவர்களுக்கு பெவிகிவிக் வாங்கி தர இருப்பதாக தெரிவித்து இருப்பது காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.


இரட்டை மலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை அப்போது பேசியவர், 

அரசியலை தாண்டி வாழ்த்தப்பட வேண்டியவர் இளையராஜா. இந்திய குடிமகனுக்கு, முதல் குடிமகன்அளித்த மிகப்பெரிய கவுரவம். மக்கள் வாழ்த்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். மதம் ஜாதி கடந்தவர் இளையராஜா. அவருக்கு எந்தவித அடையாளமும் தேவையில்லை. எல்லாத்தையும் தாண்டியவர். அனைவருக்கு சமமான மனிதர்.

அம்பேத்கர் தொடர்பான புத்தகத்தில் பிரதமர் மோடி குறித்து இளையராஜா எழுதியது பல தரப்பினர் சொல்லும் கருத்து. புதிது கிடையாது. கோவையில், தனது பிறந்த நாள் விழாவின் போது, மாநில அரசு நல்ல வேலை செய்வதாக கூறினார். அனைத்தும் அவரின் தனிப்பட்ட கருத்தாக பார்க்கிறோம். மோடி பற்றி பேசியது தனிப்பட்ட கருத்து.

அரசியல் கலக்க வேண்டிய அவசியம் கிடையாது. தனித்திறமையால் கிடைக்கும் அங்கீகாரத்தை கொச்சைபடுத்துவது வேதனையாக உள்ளது.தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்க்க வேண்டும்.திமுகவில் ஏக்நாத் ஷிண்டே உருவாக்குவோம் என கூறவில்லை. அது எங்களது வேலை கிடையாது. ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்று கூறினோம்.

மஹாராஷ்டிராவில் நடந்ததுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது.மக்களை ஆதரவை பெற்ற அன்பை பெற்று வாக்கை பெற்று ஆட்சிக்கு வருவது தான் பாரதிய ஜனதாவின் நோக்கம். குடும்ப கட்சி இருக்கிறதோ அங்கெல்லாம் ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்பது அர்த்தம். எந்த தனிப்பட்டமனிதரையும் முன்னிருத்து வளரும் கட்சி பாரதிய ஜனதா  அல்ல. தொண்டர்களுக்கான கட்சிபுதியவர்கள் வந்து கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.ஐ.சி.யு.,வில் கட்சியை வைத்துள்ள கே.எஸ். அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஐ.சி.யு.,வில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆக்சிஜனாக தி.மு.க., உள்ளது. அதனை நிறுத்திவிட்டால், ஒன்றில் கூட டெபாசிட் கூட கிடைக்காது.

ஓட்டு இயந்திரத்தில் அவர்களின் சின்னத்தை அச்சிடுவது கூட வீணாகிவிடும். அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டு, சிந்தி சிதறி கிடக்கும். கட்சியை ஒட்ட வைக்க 'பெவிக்விக்' வாங்கி தர தயாராக உள்ளோம்.பாரதிய ஜனதாவிற்கு 2024 ல் 25 எம்.பி.,க்கள் கிடைக்கும். அது உறுதி. உருண்டு வருவோம். நடந்து வருவோம். அதனை அழகிரி பார்ப்பார். அன்று காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதப்படும். ஒரு கட்சி என்ன அவமானபடுத்தினாலும், கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கூட கூட்டணியில் இருப்போம் என காங்கிரஸ் நினைக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

ஓட்டு இயந்திரத்தில் காங்கிரஸ் சின்னம் இருப்பதே வீண் என்றும், உடைந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சியை ஒற்றவைக்க பெவிகிவிக் வாங்கி தருகிறோம் என அண்ணாமலை பேசியது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது, வாயை கொடுத்து இப்படி வாங்கி கட்டும் நிலைக்கு தள்ளிவிட்டாரே கே.எஸ்.அழகிரி என குமுறி வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர் .