
உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா,பிரதமர் மோடியின் தலைமையில் கீழ் கடந்த 10 ஆண்டு கால பொருளாதாரத்தில் 105 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தரவறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2015-ம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது இருமடங்காக அதிகரித்து 2025-ல் 4.3 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது.தற்போது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிதளவிலான மாற்றம் இல்லாததால், 2024 25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் வாய்ப்புகளும் உள்ளன. 2027ம் ஆண்டு ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் 3வது பெரிய பொருளாதாரமாகவும் உருவெடுக்கும்.வாய்ப்புகள் அதிமாகி உள்ளது.
இந்த நிலையில் உலக அளவில் மிகவும் வலிமை மிக்க அமைப்பாக பிரிக்ஸ் வளர்ந்து வருகிறது. இந்த அமைப்பில் தவிர்க்க முடியாத நாடாக தற்போது மோடியின் தலைமையில் இந்தியா உருவாகியிருப்பதாக ரஷ்யா பாராட்டியுள்ளது.தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த ரஷ்யாவின் பிரிக்ஸ் நிபுணர் கவுன்சில் தலைவர் ஷெர்பா விக்டோரியா இதை கூறியிருக்கிறார்.கடந்த 3ம் தேதி விக்டோரியா ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் பேசியதாவது, "பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். மறுபுறம் ஜி20 அமைப்பிலும் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது. கடந்த 2023ல் ஜி20 அமைப்பில் தலைமையேற்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருந்தது. இதனை மிகச்சரியாக இந்தியா பயன்படுத்தியது. உலக நாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம் என்பதை இந்தியா அறிவித்தது.
'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்கிற கருப்பொருளில் 2023 ஜி20 மாநாட்டை இந்தியா வழிநடத்தியிருந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் நிர்வாகம், வர்த்தக சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக இருக்கிறது.பிரிக்ஸ் அமைப்பை பொருத்தவரை, தற்போது புதிய நாடுகள் இணைந்திருந்தாலும் பன்மைத்துவம் என்கிற கோட்பாட்டையும், ஒற்றுமை மற்றும் சுயமரியாதை என்பதையும் அடிப்படையாக கொண்டு இது இயங்கி வருகிறது. இன்றைய தேதியில் உலகம் முழுவதும் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
இதற்கிடையில் பிரிகிஸ் உரையாடலை முன்வைக்கிறது. அதன் மூலம் பஞ்சாயத்துகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறது.அந்த வகையல் ஜி20 நாடுகளை விட பிரிக்ஸ் சிறப்பாகவே செயல்படுகிறது என்று நம்புகிறோம். உதாரணமாக ஜி20 நாடுகளில் பெண்களுக்கான வாய்ப்பை எடுத்துக்கொள்ளுங்கள். தலைமை பண்பு, சம பொருளாதார வாய்ப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிரிக்ஸ் சிறப்பாகவே இயங்குகிறது" என்று கூறியிருக்கிறார்.
அவர் இப்படி சொன்னதில் உண்மை இருக்கிறது. இந்தியாவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் இது 30-40% வரை உருவாக்குகிறது. உள்நாட்டு உற்பத்தியில் 29-30% வரை பங்களிக்கிறது. ஏற்றுமதியில் 45% வரை எம்எஸ்எம்இ துறையின் பங்கு இருக்கிறது.இந்த துறையில் பெண்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். அதாவது மொத்த எம்எஸ்எம்இ துறையில் பெண்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20.5%. இது குறைவாக தெரிந்தாலும், இந்நிறுனங்கள் வீரியமாக செயல்படுகின்றன. மொத்த வேலை வாய்ப்பில் இந்நிறுவனங்கள், 18.73% பங்களிக்கின்றன. மொத்த முதலீட்டில் இவை 11.15% தனது பங்கை செலுத்துகிறது.என்பது குறிப்பிடத்தக்கது.