
முத்தலாக்கை தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு இஸ்லாமியர்களில் பெரும்பாலோனார் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பின்தங்கிய இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை இந்த சட்டத் திருத்தம் உறுதி செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடையேஆதரவை பெற்று வருகிறது. ஒட்டு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சிகள் வக்பு சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இது இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை கிளப்பியுள்ளது. இந்தியாவில், ரயில்வே மற்றும் ராணுவத் துறைக்கு அடுத்தபடியாக அதிகமான நிலங்களை வக்ஃப் வாரியமே உரிமையாக வைத்திருக்கிறது. இதனால் வக்ஃப் வாரியமே இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமையாளர் ஆகும்.
நாடு முழுவதும் 1.2 லட்சம் கோடி மதிப்பிலான 9 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்துக்கு உள்ளன. இவை 32 மாநில அளவிலான வக்ஃப் வாரியங்களின் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த வக்ஃப் வாரிய சொத்துக்கள் சுயமாக நியமிக்கப்பட்ட 200 உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது.இந்த சொத்துகள், சம்பந்தமாக சுமார் 40,000 வழக்குகள் வக்ஃப் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளன. பிரத்தியேகமாக வக்ஃப் அதிகாரத்தில் உள்ள உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளில் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்க முடிவதில்லை.வக்ஃபு சட்ட திருத்த மசோதா என்பது இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையில் ஒருபோதும் தலையிடாது. இது வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான அம்சங்களை மட்டுமே கொண்டது. வக்ஃபு சொத்துகளால் இப்போது ஏழை இஸ்லாமியர்களுக்கு பயன் என்பது இல்லாமல் உள்ளது.
வக்ஃபு சொத்துகள் ஏழை இஸ்லாமியர்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அவர்களை இப்போது இருக்கும் நிலைமையிலேயே விட்டுவிட முடியாது. வக்ஃபு சட்ட திருத்த மசோதா என்பது வருங்காலத்துக்கு ஏற்றது போல் கொண்டு வரப்பட்டுள்ளது. வக்பு வாரியத்தில் ஷியா, சன்னி, போரா உள்ளிட்ட சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். மேலும் போரா, அகாக்கணி பிரிவினருக்கு மாநில அரசு தனித்தனி வாரியங்களை அமைக்க அனுமதிக்கலாம். வக்பு வாரிய கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முன்னதாக, 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு இஸ்லாம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம், முத்தலாக் நடைமுறையைத் தடை செய்தது. திருமணமான இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், ஒருதலைப்பட்சமான தலாக் அறிவிப்புகள் செய்வதையும் இந்த சட்டம் கட்டுப்படுத்தியது.
இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்பை மேம்படுத்தும் முத்தலாக் சட்டம், ஆரம்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், பின்னர் இஸ்லாமிய சமூகத்தினரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் வக்ஃப் மசோதாவுக்காக பிரதமர் மோடியைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர் முஸ்லீம்கள் அமைப்புகள். வக்பு திருத்தச் சட்டத்தில் தங்களது கோரிக்கைகள் பல இடம்பெற்றுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.இது எதிர்கட்சிகளின் தலையில் இடியை இறக்கியுள்ளது. அது போல், இந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு இஸ்லாமியர்களின் பல்வேறு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இது திமுக போன்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள சன்னி ஷியா ஏழை இஸ்லாமியர்கள் மற்ற பிரிவு இஸ்லாமியர்கள் அனைவரும் பாஜக பக்கம் திரும்பியுள்ளார். தமிழகத்திலும் இதே நிலைமை ஏற்படுத்தியுள்ளது . வக்பு திருத்த சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடம்நேரடியாக சென்று விளக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இது ஒருபக்கம் என்றால் வக்பு வாரியத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மத்திய அமைச்சர்கள் நேரடியாக சந்திக்க உள்ளார்களாம். இனி பல அதிரடிகள் காணலாம்.