சொந்த மாவட்டத்தில் வைத்து அண்ணாமலை பேசிய பேச்சிற்கு சவால் விடுத்து தற்போது முதல்வர் ஸ்டாலினை சிக்க வைத்து இருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்து கொண்ட அண்ணாமலை பிரதமர் மோடி செயல்படுத்திய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு எடுத்து கூறினார் அப்போது பிரதமர் மோடி தமிழர்களுக்கு எத்தனை நல திட்டங்களை கொடுத்து இருக்கிறார் அவரை இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார் பிரதமரின் கால் நெகத்தின் அழுக்கிற்கு கூட மனோ தங்கராஜ் சமமில்லை இனி வாயை துறந்தால் பாஜகவின் பதிலடி வேறு மாதிரி இருக்கும் என எச்சரிகையும் கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணாமலையை விமர்சனம் செய்ததோடு நில்லாமல் தற்போது அண்ணாமலை கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட தைரியம் இருக்கிறதா எனவும் சவால் விடுத்து இருந்தார்.
இந்த சவால் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக திரும்பி இருக்கிறது நீங்கள் அண்ணாமலைக்கு எதிராக சவால் விடுவது இருக்கட்டும் முதலில் உங்கள் முதல்வரை சென்னையை தாண்டி வெளி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற சொல்லுங்கள் என புது கேள்வி எழுந்து இருக்கிறது.
இது குறித்து அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் குறிப்பிட்டதாவது நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட தைரியம் உள்ளதா அண்ணாமலைக்கு என அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டுள்ளார்..முதலில் உங்களுடைய தலைவருக்கு சென்னையைத் தாண்டி வெளியே வந்து ஒரு சட்டமன்றத்தில் போட்டியிட தைரியம் உள்ளதா? 6 முறை ஆயிரம் விளக்கிலும்,3 முறை கொளத்தூரிலும் போட்டியிட்டுள்ளார்..
எம்ஜிஆர் - கருணாநிதி - ஜெயலலிதா போன்ற தலைவர்கள் பரவலாக மாநிலம் முழுவதும் போட்டியிட்டு வென்றுள்ளார்கள் இந்த தைரியம் ஏன் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பி இருக்கிறார்.தற்போது பாஜகவினர் புது கோசம் எழுப்ப தொடங்கி இருக்கின்றனர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி போன்றோர் சென்னையை தாண்டி கொங்கு மண்டலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற தைரியம் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
அண்ணாமலைக்கு சவால் விடுப்பாத நினைத்து தற்போது அமைச்சர் மனோ தங்கராஜ் முதல்வரை சென்னையை தாண்டி தேர்தலில் போட்டியிட தைரியம் இருக்கிறதா என சொல்ல சொல்லுங்கள் என புதிய சாவாலில் சிக்க வைத்து இருக்கிறார் என புலம்ப தொடங்கி இருக்கின்றனர் உடன் பிறப்புகள்.